சிற்றுண்டி வகைகள்

சூப்பரான பெங்காலி ஸ்பெஷல்: பட்டர் ஃபிஷ் ஃப்ரை

நீங்கள் மீன் பிரியரா? அப்படியானால் பட்டர் ஃபிஷ் ஃப்ரை சாப்பிட்டதுண்டா? இல்லையா. அப்படியெனில் உங்களுக்காக பட்டர் ஃபிஷ் ஃப்ரை ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இந்த ரெசிபியானது பெங்காலியில் மிகவும் பிரபலமானது. மேலும் மிகுந்த சுவையானதும் கூட.

சரி, இப்போது அந்த பெங்காலி ஸ்பெஷல் பட்டர் ஃபிஷ் ஃப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சால்மன் மீன் – 1 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 1/4 கப் (பேஸ்ட் செய்தது)
பாதாம் – 1/4 கப் (பேஸ்ட் செய்தது)
சோள மாவு – 1-2 கப்
முட்டை – 2
பால் – 1/2 கப்
மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 1 கப்
உப்பு – தேவையான அளவு[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், முந்திரி பேஸ்ட், பாதாம் பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு அத்துடன் மீனில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

அடுத்து ஒரு பெரிய பௌலில் சோள மாவு, முட்டை, பால், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின் ஒரு மீன் துண்டை எடுத்து, கலந்து வைத்துள்ள சோள மாவுக் கலவையில் பிரட்டி, வாணலியில் உள்ள வெண்ணெயில் போட்டு, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போல் அனைத்து மீன் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், பெங்காலி ஸ்பெஷல் மீன் ஃப்ரை ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button