28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1470041811 7884
சைவம்

வெஜிடபிள் வெள்ளை குருமா

தேவையானவை:

காய்கறி கலவை – 1 கப் (பீன்ஸ், காரட், காலிப்ளவர், பட்டாணி, உருளை)
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பட்டை, லவங்கம் – 1/2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

அரைக்க:

தேங்காய் – அரை மூடி
பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
சோம்பு – 1/4 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 5
பூண்டு – 8
கசாகசா – 2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு அதக்கி தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் காய்கறிகளை போட்டு நல்லா ஒரு வதக்கு வதக்கி சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நல்லா கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்த பின் மல்லி இழை தூவி அடுப்பை அணைத்துவிடவும்.

சுவைமிகுந்த வெஜிடபிள் வெள்ளை குருமா தயார். இவை இடியாப்பம், சப்பாத்திகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.1470041811 7884

Related posts

பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

வெஜிடபிள் மசாலா

nathan

சத்தான வெங்காய – மிளகு சாதம் செய்வது எப்படி

nathan

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

nathan

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan

ஃபிரைடு ரைஸ்

nathan

சுவையான காளான் ரோஸ்ட்

nathan

சூப்பரான பாகற்காய் ப்ரை

nathan

நார்த்தங்காய் சாதம்

nathan