24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
201702181433138136 How to eat nutritious meals to children SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?

வீட்டில் தயாரித்த உணவை ஊட்டிவிடுவதே குழந்தைக்காக பெற்றோர் செய்யும் முதல் ஆரோக்கிய வழி. குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்களின் கைவில் உள்ளது.

குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?
சாந்தமாக, சீராகச் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சரியான உணவுதான் ஆரோக்கியம் தரும்.

* வீட்டில் தயாரித்த உணவை ஊட்டிவிடுவதே குழந்தைக்காகப் பெற்றோர் செய்யும் முதல் ஆரோக்கிய வழி. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால். ஆறு மாதத்திலிருந்து தாய்ப்பாலுடன் கேழ்வரகுக் கஞ்சி, அரிசிக் கஞ்சி செய்து தரலாம்.

* ஒவ்வொரு வேளைக்கும் ஓர் உணவை அறிமுகப்படுத்த வேண்டும். காலையில் இட்லி, பொங்கல், கேசரி, கிச்சடி போன்றவை. மதியம் சாதம், பருப்பு, காய்கறிகள், மசித்த கேரட், உருளைக்கிழங்கு, சாம்பார், ரசம், தயிர் சாதம், மோர் சாதம். மாலையில் ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, வாழைப்பழம் கொடுக்கலாம். ஒன்பது மாதங்கள் முடிந்தவுடன், முட்டையின் மஞ்சள்கரு கொடுக்கலாம். இந்த உணவுகளை மசித்துக் கொடுக்க வேண்டும்.

* ஒரு வயதுக்குப் பின் முட்டையின் வெள்ளைப் பகுதி, பசும்பால் கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு பாலில் உள்ள புரதம் அலர்ஜியை ஏற்படுத்தி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இவர்கள் பசும்பாலைத் தவிர்க்க வேண்டும்.

* ஒரு வயதுக்குப் பிறகு, அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். பற்கள் முளைக்க ஆரம்பித்ததுமே, அவர்களாக எடுத்துச் சாப்பிட வைக்கலாம்.

* பெற்றோர் என்ன செய்கின்றனரோ அதையேதான் பிள்ளைகளும் பின்பற்றுவர். நாம் எந்த மாதிரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சமைக்கிறோம், எதைச் சாப்பிடுகிறோம் என்பதை குழந்தை கவனித்துக்கொண்டு இருக்கும். குழந்தை முன் ‘பீட்ரூட் பிடிக்காது’ என்றால், குழந்தையும் பீட்ரூட்டைத் தவிர்க்க தொடங்கும். எனவே, பெற்றோர் கவனமுடன் செயல்படுவது நல்லது.

* உணவு உற்பத்தியாவது எப்படி என சொல்லித் தந்து, அதன் மேல் மதிப்பை ஏற்படுத்தி, அவற்றை வீணாக்காமல் சாப்பிடவைப்பது பெற்றோர் கையில்தான் உள்ளது.

* சாப்பிடும்போது டி.வியைத் தவிர்த்து மெல்லிய இசையைக் கேட்டபடி சாப்பிட வைக்கலாம் அல்லது ஊட்டலாம். உணவு பற்றிய கதைகளைச் சொல்லலாம்.

* குழந்தைகளுக்கான உணவைத் தயாரிக்கும்போது கவனம் தேவை. அவர்களைக் கவரும் விதத்தில் உணவைத் தயாரிக்க வேண்டும். வெவ்வேறு வடிவங்களில் தோசை சுடலாம். வழக்கமான இட்லிக்குப் பதில், சிவப்பு அரிசி, கேழ்வரகு இட்லி என வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறிகள் சேர்த்து வித்தியாசமாகக் கொடுக்கலாம்.

* பள்ளி செல்லும் குழந்தைகள் சரியாக உண்ணாமல், உணவை வீணாக்குவது வாடிக்கை. அவர்களை ஈர்க்கும் விதத்தில் சுவையான உணவாக இருந்தால், வீணாக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு, சதுர இட்லி, பொடி இட்லி, ஸ்டார் தோசை என மாற்றிக்கொடுக்கலாம். லன்ச் பாக்ஸில், சூப்பர் ஃபுட், டேஸ்ட்டி தோசை என ஜாமினால் எழுதி வைக்கலாம்.

* வெளி உணவுகளைச் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், அதை அளவுடன் எடுத்துக்கொள்வது நல்லது. வெளியில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, `ஒரு நாளைக்குத்தானே.’ என ஜங்க் ஃபுட் வாங்கித்தராமல், நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து வாங்கித் தர வேண்டும். குடும்பத்துடன் சிறுதானியத் திருவிழா, பாரம்பர்யத் திருவிழாக்களுக்குச் சென்றுவரலாம். தினை முறுக்கு, கம்பு தட்டை என சுவைக்கக் கொடுக்கலாம். பருத்திப்பால், கேழ்வரகுப் பால் போன்ற ஊட்டச்சத்து பானங்களைக் கொடுத்து பழக்கப்படுத்துவது நல்லது.
201702181433138136 How to eat nutritious meals to children SECVPF

Related posts

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி டர்ர்ர்ர்ர்… கட்டுப்படுத்த சில யோசனைகள்!

nathan

இதோ எளிய நிவாரணம்.. உலர்ந்த இஞ்சியின் பயன்கள் என்ன ??

nathan

இளம் வயதினரை திருமணம் செய்யக்கூடிய 4 ராசிகள்

nathan

நேரத்தை மிச்சப்படுத்த வண்டியில் செல்லும் போதே சாப்பிடும் நபரா நீங்கள்?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு டைம்க்கு பீரியட்ஸ் ஆகலையா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

இயற்கையாக குறட்டைக்குத் தீர்வுகாண எளிய வழிகள்…

sangika

கரும்புள்ளிகளை நீக்கும் வீட்டு வைத்தியம்!

nathan

சுவையான கம்பு அல்வா…

nathan

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!…

sangika