ஆரோக்கியம் குறிப்புகள்

‘அந்த இடத்தில்’ அரிப்போ எரிச்சலோ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

பெண்களுக்கு யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்புடன் காணப்படும்.

பொதுவாக பெண்கள் கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் அரிப்பு, எரிச்சல், வறட்சி ஏற்படுதல், நாப்பின்களால் அரிப்பு, அந்த பகுதியில் ஏற்படும். அதிகப்படியான வியர்த்தல், உடல் பருமன் போன்றவற்றால் அந்தரங்கப்பகுதியில் அரிப்பு ஏற்படுகின்றது.

இதற்கு மேலும் பல காரணிகள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக பெண்களுக்கு யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்புடன் காணப்படும்.

இதனை போக்க கண்ட கண்ட கிரீம்களை தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினால் போதும்.

கொஞ்சம் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.

ஓட்ஸ் உடன் 1 டேபிள் ஸ்பூன் சூடான நீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இது ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] வேப்பிலையில் அல்கலைடு இருப்பதால் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி வைரல் தன்மை கொண்டுள்ளது. எனவே இதை சருமத்திற்கு வெளியேவும் உள்ளேயும் கூட பயன்படுத்தலாம்.

யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு திரும்பவும் செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

வேறு வழிகள்

இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.
குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள்.
நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.
உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
கோடை காலத்தில் ரொம்ப தூரம் நடந்து செல்லாதீர்கள்.
ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள்.
பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.-News & image Credit: maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button