விற்றமின் Aஆனது கண்பார்வையை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை விருத்தி செய்கிறது. உடல் கலங்களின் வளர்ச் சிக்கும் அவற்றின் விருத்திக்கும் பமிகவும் முக்கியமானது.
ஆரோக்கியமான தோலை பேணி வைத்திருப்பதற்கும் உதவுகின்றது.
விற்றமின் A அதிகளவில் காணப்படும் உணவுகளாவன.
இவை பச்சை, கடும் மஞ்சள் அல்லது மென்சிவப்பு போன்ற நிறங்களைக் கொண்ட பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படுகின்றன.
விலங்கு உணவுகள்
முட்டை, முழுப்பால், சீஸ், பட்டர், இறைச்சி, ஈரல்,மீன் எண்ணெய்
கடும் பச்சை இலைக் காய்கறிகள்
அகத்திமுளைக்கீரை,பசளிக்கீரை, கரட் மற்றும் பீற்றுாட் இலைகள், முள்ளங்கி இலை, முருங்கை இலை, கறிவேப்பிலை, மஞ்சள் கிழங்கு இலை மற்றும் கடும் பச்சைநிறமான சாப்பிடக்கூடிய இலைகள்.
ஏனைய காய்கறிகள்
கரட், மஞ்சள் வத்தாளை, உருளைக் கிழங்கு, தக்காளி, மஞ்சள் பூசணிக்காய்
பழங்கள்
மாழ்பழம், பலாப்பழம், இலாவுழுப்பழம், தோடம்பழம்
இரும்புச்சத்து
செங்குழியங்களின் முக்கியமான பகுதியாக இரும்பு இருக்கின்றது. இரும் புச்சத்து குறைபாட்டினால் குருதிச் சோகை நோய் ஏற்படும். பச்சை இலைக் காய்கறிகளில் இரும்பு அதிகமாக காணப்பட்டாலும், அதனை அகத்துறிஞ்சி பெற்றுக் கொள்ளக் கூடிய இரும்பின் அளவானது, விலங்குஉணவுகள் மூலம் அகத்துறிஞ்சி பெற்றுக்கொள்ளக்கூடிய இரும்பின்அளவை விட குறைவாகவே இருக்கும்.
இரும்புச்சத்து அடங்கியுள்ள உணவுகளாவன
இறைச்சி, ஈரல், சிறுநீரகம் மற்றும் சிவப்புநிற இறைச்சியிலான மற்றைய உறுப்புக்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி.
மீன்
Tuna இனங்கள், பாரைமீன், கெலவல்லா மீன், வாளை மீன், நெத்தலிமீன் மற்றும் ஏனைய கருவாடுகள்.
முட்டை
கோழிமுட்டை, குயில் முட்டை, வாத்து முட்டை.
கடும் பச்சை மற்றும் ஏனைய இலை காய்கறிகள்
மூளைக்கீரை, சாரணை, வல்லாரை, பொன்னாங்காணி,அகத்தி,கரட் மற்றும் பீற்றுட் இலைகள்.
காய்கறிகள்
தாமரைத்தண்டு (தாமரைக்கிழங்கு)
பருப்பு வகைகள்
அவரை, சோயாஅவரை, பயறு, உழுந்து, கடலை, கெளபி மற்றும் பருப்பு.