சட்னி வகைகள்

தெரிஞ்சிக்கங்க…தக்காளி வெங்காயமே இல்லாமல் சுவையான சட்னி செய்வது எப்படி?

பல வகையான சட்னியில் பல வகையான நன்மைகள் உண்டு. அந்த வகையில் கருவேப்பில்லை சட்னியில் தக்காளி வெங்காயமே இல்லாமல் எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்;

சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 4, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, புளி – ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப, தேங்காய் துருவல் – அரை கப், பூண்டு – 2, தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – 1

செய்முறை விளக்கம்

கருவேப்பில்லை சட்னி செய்ய தேவையான பொருட்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள். தேங்காயை தோல் இல்லாமல் பூப்போல அரை கப் அளவிற்கு துருவி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக, கறிவேப்பிலையை பச்சையாக எடுத்து அதை கழுவி உருவி சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.

அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். இதன்பின்னர், எண்ணெய் காய்ந்தபின் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். உளுந்து நன்கு வறுபட்டதும் அதனுடன் நீள நீளமாக இருக்கும் நான்கு வர மிளகாய்களை எடுத்து காம்புகள் நீக்கி சேர்த்து வதக்க வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அடுத்து, ஒரு கைப்பிடி அளவிற்கு நீங்கள் எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கறிவேப்பிலை இலைகள் சுருள வதங்கியதும். 2 பல் பூண்டை தோலுரித்து சேர்த்து வதக்குங்கள்.

பின்னர் ஒரு சிறு அளவிற்கு புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். இவைகள் அனைத்தும் வறுபட்டதும் அரை கப் அளவிற்கு தேங்காய் துருவலை சேர்த்து சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு ஒரு முறை பிரட்டிவிட்டு பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விட வேண்டியது தான்.

இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த சுவையான கறிவேப்பிலை சட்னிக்கு தாளிப்பு கொடுத்தால் இன்னும் சுவையாக கமகமவென இருக்கும்.

அதற்கு முதலில் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமாற வேண்டியது தான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button