சட்னி வகைகள்

கேரளா பூண்டு சட்னி

2 kerala garlic chutney 1659187769

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் – 2 1/2 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* பூண்டு – 1/2 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* வரமிளகாய் – 4 (சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்தது)

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள வரமிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, சிறிது வெதுவெதுப்பான நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Kerala Garlic Chutney Recipe In Tamil
* பிறகு அரைத்ததை ஒரு பௌலில்/கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அதில் அரைத்த சட்னியை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, 1-2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால், கேரளா பூண்டு சட்னி தயார்.

Related posts

சூப்பரான செட்டிநாடு மிளகாய் சட்னி

nathan

தேங்காய் – பூண்டு சட்னி

nathan

சூப்பரான கேரட் தக்காளி சட்னி

nathan

மாதுளம் சட்னி

nathan

ருசியான எள்ளு சட்னி செய்வது எப்படி?

nathan

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி

nathan

சுவையான வெங்காய சட்னி

nathan

நெல்லிக்காய் சட்னி

nathan

தக்காளி – பூண்டு சட்னி

nathan