27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
madhualai 18530 13112
ஆரோக்கிய உணவு

1 பழம்… 14 பலன்கள்… பிரமிக்கவைக்கும் மாதுளை!

மாதுளம்பழத்துக்கு அயல்நாடுகளில் இன்னொரு பெயர் உண்டு… `சைனீஸ் ஆப்பிள்.’ பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும்கொண்டது; பிளேக், புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும் மகத்துவத்தை உடையது. சரி, மாதுளையில் உள்ள சத்துக்கள் என்னென்ன… அதன் பலன்கள் என்னென்னவென்று பார்ப்போம்…

மாதுளை

மாதுளை தரும் 14 பிரமாதப் பலன்கள்…

* உடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.

* உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.

* மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

* மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.

* மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

* தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

* வயோதிகத் தன்மையைத் தள்ளிப்போடும் பெரும்பாலான `ஆன்டி ஏஜிங்’ சீரம் மாதுளம்பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது. பழமாகச் சாப்பிடும்போது அதைவிட அதிகப் பலன்கள் கிடைக்கும்.

* அயல்நாடுகளில், பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.

* மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

* திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

* மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.

* தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால், ரத்த அழுத்தம் குறையும்.

* சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளார்கள்.

* தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.

மாதுளை

மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துகள்

(100 கிராம் மாதுளையில்)

கலோரி – 83

வைட்டமின் சி – 17%

வைட்டமின் கே – 14%

கார்போஹைட்ரேட் – 14%

புரதச்சத்து – 14%

பொட்டாசியம் – 6%

இரும்புச்சத்து – 4%

மக்னீசியம் – 3%

கொழுப்பு – 1%

நார்ச்சத்து – 16%

இத்தனை சத்துக்கள் நிறைந்த மாதுளம்பழத்தின் முத்துக்களை தினமும் ஒரு கைப்பிடியாவது சாப்பிடுங்கள். அதிலும் ஹைபிரிட் பழங்களைத் தவிர்த்து நாட்டுப்பழங்களைத் தேர்தெடுங்கள். மாதுளம்பழம் மகத்தானது… இதில் மாற்றுக்கருத்தே இல்லை!madhualai 18530 13112

Related posts

சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் சாப்பிட்டுள்ளீர்களா?

nathan

தினமும் வெறும் 6 பாதாம்! நீரிழிவு நோயாளிகளுக்கு நிகழும் அதிசயம் -தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான மாதுளை எலுமிச்சை ஜூஸ்

nathan

குழந்தை பிறந்த உடன் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி

nathan

தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்…?

nathan

குழந்தைகளுக்கு தரலாமா சத்து மாவு?

nathan

சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் நிறைந்து இருக்கும் சத்துகள் புற்றுநோய் செல்களை மேலும் மேலும் வளராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.

nathan