25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
19 1439979418 4whatdoesyourbraindowhileyouareasleep
மருத்துவ குறிப்பு

நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா??

இரவில் நாம் தான் தூங்குகிறோமே தவிர, நமது உடல் உறுப்புக்கள் தூங்குவது இல்லை. ஒருவேளை அப்படி நாம் தூங்கும் போது நமது இதயமும், மூளையும் சேர்ந்து தூங்கிவிட்டால், நாம் நிரந்தரமாக தூங்கிவிட வேண்டியது தான்.

"சரி, அப்போ நாம தூங்கும் போது நம்ம மூளை என்ன தான் செய்யுது…?" என்று கேட்கிறீர்களா. நமது மூளை தான் மற்ற அனைத்து உடல் உறுப்புகளையும் இயக்கும் தலைவன். இவருக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. அது என்னென்ன என்று இனிப் பார்க்கலாம்….

15 நிமிடங்கள் தூங்கும் போது நீங்கள் காலை அல்லது மாலை வேளையில் குட்டி தூக்கம் போடும் போது, மூளை தனது எனர்ஜியை அதிகரித்துக் கொள்ளுமாம். இதனால் நிறைய கற்கவும், நினைவுகளை சேமிக்கவும் செய்கிறது நமது மூளை.

30 நிமிடங்கள் தூங்கும் போது நீங்கள் 30 நிமிடங்கள் தூங்கும் போது உங்கள் மூளை, கற்பனை திறன் மேம்பாட்டு வேலைகளில் ஈடுபடுகிறதாம். மற்றும் அதே வேளையில் நினைவுத்திறனை பெருக்கிக் கொள்ளவும் செய்கிறது.

45 நிமிடங்கள் தூங்கும் போது அரைமணி நேரத்திற்கு மேல் நீங்கள் தூங்கும் போது அதிக விஷயங்களை நினைவுக் கொள்ள உதவுகிறது மூளை. இந்த நேரத்தில் தான், எது வேண்டும், வேண்டாம் என முடிவு செய்து, நினைவுகளை சேமிக்கிறது மூளை.

ஒரு மணிநேரம் தூங்கும் போது ஓர் ஆய்வில், ஒரு மணி நேரத்திற்கு மேல் நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிய உதவுகிறது என கூறப்பட்டுள்ளது. நீங்களே கூட சில சமயங்களில் இதை உணர்திருக்கலாம். ஏதேனும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் இருந்திருப்பீர்கள், ஆனால், கொஞ்ச நேரம் தூங்கி எழுந்த பிறகு அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அதற்கு இது தான் காரணம்.

ஒருமணி நேரத்திற்கு மேலாக தூங்குவது ஒருமணி நேரத்திற்கு மேல் நீங்கள் தூங்குவது நல்ல உறக்கம் தான். இந்த நேரத்தில் உங்கள் மூளையும் நன்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.

எச்சரிக்கைகள் நீங்கள் தூங்கும் முன்பு இருப்பதை விட, தூங்கி எழுந்தவுடன் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். இது, உங்கள் மூளை நன்கு சுறுசுறுப்பாக இருப்பதற்கான அறிகுறி.

சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது வேலைக்கு இடையில் 20 நிமிடங்கள் குட்டி தூக்கம் போட்ட பிறகு நீங்கள் வேலை செய்ய ஆரம்பித்தால், நீங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியும். ஏனெனில், உங்கள் உடலோடு சேர்ந்து, உங்கள் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்.

வேலையில் சிறந்து செயல்பட முடியும் நீங்கள் உறங்குவது உங்கள் மூளைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் உங்கள் வேலையில் சிறந்து செயல்படவும் உறக்கம் உதவுகிறது.

மன அழுத்தம் குறைய மன சோர்வு அல்லது மன அழுத்தமாக நீங்கள் உணர்தால், 15 நிமிடம் ஓர் குட்டி தூக்கம் போடுங்கள். இது மன அழுத்தம் குறைய நல்ல முறையில் உதவும்.

ஞாபக மறதி குறையும் நல்ல உறக்கம் உங்கள் ஞாபகமறதியை குறைத்து, நினைவுத் திறனை அதிகரிக்க உதவும். உறக்கம், உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் நன்கு ஆக்டிவாக செயல்பட உதவுகிறது, புத்துணர்ச்சி அளிக்கிறது.

19 1439979418 4whatdoesyourbraindowhileyouareasleep

Related posts

தூங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா?

nathan

2 டம்ளர் கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள். கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க.

nathan

யாருக்கெல்லாம் சிறுநீர்க் குழாய் தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது

nathan

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

nathan

காதலியை நினைத்துக்கொண்டு மனைவியுடன் வாழும் ஆண்கள்

nathan

நீங்க தவறாம ஃபாலோ பண்ணா போதும்.. சீக்கிரமா உங்க எடை குறையுமாம்…!

nathan

உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றுவது எப்படி?

nathan

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்

nathan