மருத்துவ குறிப்பு

பிறந்த பச்சிளம் குழந்தைகள் பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?தெரிந்துகொள்ளுங்கள் !

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல; அதிலும் பிறந்த குழந்தைகள் எப்பொழுது பசியாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வளவு உணவு அளிக்க வேண்டும் என்பது புதிய தாய்மார்களுக்கு பெரிய சந்தேகமாக, கேள்வியாக இருக்கும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு எந்த வயதில் என்ன உணவுகள் எந்த அளவுக்கு அளிக்க வேண்டும் என்பது பற்றி முந்தைய பதிப்பில் பார்த்தோம். இந்த பதிப்பில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி என்று படித்து அறியலாம்.

தாய்ப்பால் அவசியம்!

குழந்தைகள் தாயின் வயிற்றில் இருந்து பிறந்தவுடன் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு தாய்ப்பால் தான்; தாய்ப்பால் என்பதனை உணவு என்று கூறுவதை விட இயற்கையின் தடுப்பூசி, கலப்பிடமில்லாத அமிர்தம் என்றே கூறலாம். குழந்தைகளுக்கு இந்த தாய்ப்பால் என்னும் அமுதை பிறந்த தருணம் முதல் ஆறு மாத காலம் வரை கண்டிப்பாக தாய்மார்கள் அளிக்க வேண்டியது அவசியம்.

இணை உணவுகள்

குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்த பின் தாய்ப்பாலுடன் கூடுதலாக இணை உணவுகளையும் வழங்க தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இந்த இணை உணவுகள் ஆரோக்கியம் தரக்கூடியதாக இருக்க வேண்டியது அவசியம்; ஆரோக்கியத்துடன் அதிக சத்துக்களையும் குழந்தைகளுக்கு தரும் உணவுகளை தாய்மார்கள் சுகாதாரமான முறையில் தங்கள் கையால் தயாரித்து அளித்தல் நன்று.

பசியை அறிவது எப்படி?

குழந்தைக்கு பசி ஏற்படுவதை நான் எப்படி அறிவது என்ற கேள்வி தாய்மார்களின் மனதில் எழலாம். இதற்கான விடையை தான் இப்பொழுது நீங்கள் இங்கு பார்க்க போகிறீர்.

குழந்தைக்கு பசி எடுத்தால், பால் குடிப்பது, பாலை உறிஞ்சுவது போன்ற செய்கைகளை செய்யும், குழந்தை அன்னையின் மார்பகத்தை நோக்கியே முகத்தைக் கொண்டு வரும்; தலையை திருப்பிக் கொண்டே இருக்கும், குழந்தைக்கு அதிகம் பசி எடுத்தால், அழ ஆரம்பித்து விடும் – இது போன்ற அறிகுறிகள் மூலம் குழந்தைக்கு பசி எடுப்பதை அன்னையர்கள் அறியலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இரவில் ஏற்படும் பசி

மேலும் குழந்தைக்கு இரவில் அதிகம் பசி எடுக்கும், குழந்தைக்கு பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வும் இரவில் அதிகம் ஏற்படும். முதல் மாதத்தில் குழந்தைக்கு எடை குறைவு ஏற்பட்டால், பயம் கொள்ள வேண்டாம்; இது இயற்கையே! குழந்தை பிறந்த பின் முன்பு இருந்த எடையில் 10% எடையை இழக்கும்; பின் சிறிது நாட்களிலேயே குழந்தையின் எடை கூடத் தொடங்கி, இழந்த எடையை குழந்தையின் உடல் பெற்று விடும்.

 

உணவு அளிக்கும் முன்!

குழந்தைகளுக்கு எப்பொழுது உணவு அளித்தாலும், அவர்கள் வயிறு நிரம்பும் வரை மட்டுமே உணவு அளிக்க வேண்டும்; அளவுக்கு அதிகமாக உணவினை திணிக்க கூடாது. குழந்தைகள் தனக்கு பசி எடுப்பதையும், உணவு வேண்டாம் என்பதையும் தனது அறிகுறிகள் மற்றும் தனது செயல்களின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தும்.

குழந்தைகள் குண்டாக வேண்டும் என்ற ஆசையில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறேன் என்ற பெயரில் பல தாய்மார்கள் செய்யும் தவறினை கொஞ்சம் திருத்திக் கொள்ள வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

தாய்மார்களின் கவனத்திற்கு!

குழந்தைகள் பிறந்த ஓரிரு நாட்களுக்கு அவர்களின் துணிகளை 2-3 முறை மாற்ற வேண்டி வரும்; அதோடு ஒரு நாளைக்கு குறைந்தது 6 டையர்களையாவது மாற்ற வேண்டி வரும். அவர்களின் மலம் நிறம் அற்றதாகவும், மணம் அற்றதாகவும் இருக்கும்; குழந்தைகளின் மலம் கடுகு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

குழந்தைகள் பிறந்த பின் அவர்களின் உடலில் நடைபெறும் சிறு சிறு மாற்றங்களையும் கவனித்து வர வேண்டியது தாய்மார்களின் கடமை. தாய்மார்கள் குழந்தைகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருதல் நல்லது.

அறிகுறிகள் முக்கியம்

குழந்தை பிறந்த பின் அவர்தம் எடையை இழப்பர் என்று கூறப்படுகிறது; அவ்வாறு அவர்கள் எடையை இழந்த பின், அடுத்த 2 வாரங்களில் அவர்களின் எடை கூடவில்லை எனில் அது குழந்தை தனக்கு போதுமான உணவினை உண்ணவில்லை என்பதைக் குறிக்கும்.

மேலும் குழந்தையின் டையப்பர்களின் எண்னிக்கை 6-8 என்ற எண்ணிக்கையினை விட குறைவாக இருந்தாலும், குழந்தை தனது உடலுக்கு தேவையான சரியான ஊட்டச்சத்தினை பெறவில்லை என்பதை குறிக்கும்; குழந்தை எப்பொழுது பார்த்தாலும் கண்ணினை திறவாது உறங்கிக் கொண்டே இருந்தாலும் அதுவும் ஊட்டச்சத்து குறைபாட்டினையே குறிக்கும்..!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button