25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
20 1440048036 1 wakeup
ஆரோக்கியம் குறிப்புகள்

எப்போதும் ஃபிட்டாக இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

தற்போது வரும் நோய்களைக் காணும் போது, ஒவ்வொருவருக்கும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது பயம் ஏற்படுகிறது. மேலும் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பலரும் கஷ்டப்பட்டு பல செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் அப்படி கஷ்டப்பட்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு பதிலாக, எளிமையான வழிகளை அதுவும் அன்றாடம் நாம் மேற்கொள்ளும் செயல்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாலே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

அதுவும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள சில செயல்களை தினமும் தவறாமல் பின்பற்றி வந்தால், உடல் பருமன், தொப்பை, இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பல பிரச்சனைகளை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போமா!!!

அதிகாலையில் எழவும் ஒவ்வொருவருக்கும் நல்ல தூக்கம் அவசியம் தான். தூங்கும் நேரத்தை யாரும் குறைக்க சொல்லவில்லை. ஆனால் தினமும் அதிகாலையில் எழுந்து, இரவில் விரைவில் தூங்க செல்ல வேண்டும். இப்படி அன்றாடம் பின்பற்றி வந்தால், உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கலாம். அதுவும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து வந்தால், சீரான இடைவெளியில் பசி எடுப்பதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

டிவி பார்க்கும் போது… பலரும் டிவி பார்க்கும் நேரத்தில், சிப்ஸ், பிஸ்கட், பஜ்ஜி, போண்டா என்று எதையேனும் தின்று கொண்டே பார்ப்போம். ஆனால் அப்படி டிவி பார்க்கும் நேரத்தில் நொறுக்குத்தீனிகளை நொறுக்குவதற்கு பதிலாக, சிறு சிறு எளிமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், டிவி பார்த்தது போன்றும் இருக்கும், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியை செய்தது போன்றும் இருக்கும் அல்லவா? சரி, என்ன உடற்பயிற்சியை செய்யலாம் என்று கேட்கிறீர்களா? அப்படியெனில் இதோ சில…

புஷ் அப்
தரையில் புஷ் அப் செய்ய மிகவும் கஷ்டமாக இருந்தால், சுவர்களில் புஷ் அப் செய்யலாம். அதுவும் 1 செட்டிற்கு 12 முறை என 1 நிமிட இடைவெளி விட்டு மற்றொரு செட் என 3 செட் செய்ய வேண்டும்.

நாற்காலியில் அமர்வது போன்ற பயிற்சி
கைகளை நேராக நீட்டிக் கொண்டு, நாற்காலியில் அமர்வது போன்று உட்கார்ந்து எழ வேண்டும். இப்படி 1 செட்டிற்கு 12 முறை என 1 நிமிட இடைவெளி விட்டு மற்றொரு செட் என 3 செட் செய்ய வேண்டும்.

நடைக்கு முக்கியத்துவம் கடைக்கு செல்ல வேண்டுமானாலோ அல்லது கோவிலுக்கு செல்ல வேண்டுமானாலோ, பைக்கில் செல்வதற்கு பதிலாக, நடந்து செல்லுங்கள். இதுவும் ஓர் அற்புதமான உடற்பயிற்சியே. ஒருவேளை செல்லும் இடம் மிகவும் தொலைவில் இருந்தால், சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லலாம். இதுவும் ஓர் உடற்பயிற்சி தான்.

விடுமுறை நாட்களில் தூக்கம் வேண்டாம் இன்று விடுமுறை என்று எப்போதும் தூங்கிக் கொண்டே இல்லாமல், நண்பர்களை அழைத்து அவர்களுடன் அருகில் உள்ள ஏதேனும் ஒரு மைதானத்தில் பிடித்த விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள். முடிந்தால், தினமும் காலை அல்லது மாலையில் நண்பர்களுடன் பிடித்த விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

வீட்டு வேலைகள்
வீட்டு வேலைகளான துணி துவைப்பது, வீட்டை துடைப்பது, பாத்திரம் கழுவுவது, மசாலா அரைப்பது போன்றவற்றை மெஷின்களின் உதவியால் செய்வதைத் தவிர்த்து, நீங்களே செல்ல முயற்சி செய்யுங்கள். இதனால் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஏனெனில் வீட்டு வேலைகளே மிகவும் சிறப்பான உடற்பயிற்சி. சொல்லப்போனால் வீட்டு வேலைகளில் இருந்து தான் உடற்பயிற்சிகள் வந்தது எனலாம்.

20 1440048036 1 wakeup

Related posts

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி

nathan

அடேங்கப்பா! பூண்டு தேன் இரண்டையும் இந்த முறையில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.?

nathan

மிக விரைவாக உயிரை பறிக்க கூடிய கொடிய நோய்கள்!!

nathan

குழந்தைகளுக்கு சுகாதாரம் பற்றி கட்டாயமாக கற்றுக் கொடுங்க…!

nathan

மூட்டு வலியை அடித்து விரட்டும் இயற்கை பொருட்கள்…தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் எடை குறைவாக இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

nathan

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை

nathan

சூப்பர் டிப்ஸ் ! உடல் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்….!!

nathan

சூப்பர் டிப்ஸ்! வீட்டிலேயே சோப்பு தயாரிப்பது எப்படி?

nathan