31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் தயிர் பச்சடி

சுரைக்காயில் நீர்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் சூடு தணிவதற்காக இதனை உணவில் சேர்ப்பது நல்லது. இப்போது சுரைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் தயிர் பச்சடி
தேவையான பொருட்கள் :

சுரைக்காய் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1 சிறியது
தயிர் – 1 கப்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 இணுக்கு

தாளிக்க :

கடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணெய்

பொடிக்க :

இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 5 பற்கள்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 2 இணுக்கு

செய்முறை :

* சுரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அல்லது துருவிக் கொள்ளவும்.

* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பொடிக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் சுரைக்காயை போட்டு, நன்கு கிளறவும், சூட்டில் சுரைக்காய் லேசாக நீர்விடும்.

* அதற்கு பின்னர் தேவையான அளவு தன்ணீர் தெளித்து மூடி வேகவிடவும். உப்பு போட்டு, வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

* ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

* அடித்த தயிரில் பொடித்த பொருட்களை போட்டு நன்றாக கலக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கலக்கவும்.

* சத்தான சுரைக்காய் தயிர் பச்சடி ரெடி.

* இந்த பச்சடியை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Related posts

ஆண் பெண்ணுக்கு உயிர் தோழனாக இருக்க முடியுமா?

nathan

ஆண்களை காட்டிலும் பெண்கள் ஏன் அதிகம் அழுகிறார்கள் தெரியுமா?

nathan

வெயில் வெப்பம் தணிக்கும் எண்ணெய் குளியல்..செய்யவேண்டியதும் தவிர்க்கவேண்டியதும்.!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சிசேரியனுக்கு பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

nathan

டாட்டூ நல்லதா?

nathan

அல்சரா… அலட்சியம் வேண்டாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க… மாதம் ஒருமுறை இந்த டயட்டை ஃபாலோ பண்ணுனா, குடல் எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா?

nathan

பல் கூச்சத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

இதோ சில எளிய வழிகள்! இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

nathan