23.2 C
Chennai
Saturday, Dec 13, 2025
ht444858
ஆரோக்கிய உணவு

புற்றுநோயை உண்டாக்கும் டீ பேக்

நாகரிக வாழ்வின் புதிய அடையாளமாகி வருகிறது டீ பேக்குகள்.

தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று உணவியல் நிபுணர் சாந்தி காவேரியிடம் கேட்டோம்.

”டீ பேக்குகள்(Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம்(NIOSH) தெரிவித்துள்ளது.இந்த வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.தற்போது இதுபோன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது. இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது. மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

சில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு உண்டாகிறது. ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis என்ற நிலை உருவாகிறது. இந்த நிலையால் பற்களின் நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. டீபேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும் சிறுநீரகபிரச்னைகள் உண்டாகிறது.

இத்தனை உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகிற அளவுக்கு, தரமற்றதாகவே பெரும்பாலும் டீ பேக்குகள் தயார் செய்யப்படுவதால் அவற்றை இனம் கண்டறிந்து தவிர்ப்பதே நல்லது” என்கிறார் சாந்தி காவேரி. டீ பேக் தயாரிப்பு, அதில் உள்ள வேதிப்பொருட்கள் பற்றி முதுகலை வேதியியல் ஆசிரியர் ரவி சுந்தரபாரதியிடம் கேட்டோம்.”டீ பேக்குகளை காட்டன் துணிகளில் தயார் செய்யும் பட்சத்தில் அதனால் பாதிப்பில்லை. ஆனால், தற்போது டீ பேக்குகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டி அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்திச் செலவைக் குறைத்து விற்பனையை அதிகரிப்பதற்காக செயற்கை தொகுப்பு துணிகளால்(Synthetic Fabrics) செய்யப்பட்ட டீ பேக்குகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

Polyethylene Terephthalate (PET) என்ற வேதிப்பொருளை டீபேக்கு கள் உறுதியாக, பளபளப்பாக இருப்பதற்காக சேர்க்கிறார்கள். இந்த டீபேக்குகளை, டீ தயார் செய்யும் போது சூடான நீர் அல்லது பாலில் மூழ்கும்படி வைக்கும்போது PET வேதிப்பொருள் வெளிப்படுகிறது. இது ஒரு புற்று நோய் காரணியாக உள்ளது. சாதாரண தேயிலை காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சும் தன்மையுடையது. இப்படி ஈரமாவதால் அந்த தேயிலையில் பூஞ்சை, காளான் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.இதைத் தடுப்பதற்காக Synthetic fluoride மற்றும் பூச்சிக்கொல்லி களை டீ பேக்குகளில் சேர்க்கின்றனர். இவை புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளாக உள்ளது. பார்க்க அழகாக, பயன்படுத்த சுலபமாக இருப்பதாலோ, கண்ணைக் கவரும் விளம்பரங்களைப் பார்த்தோ இதுபோன்ற பொருட்களை வாங்கக்கூடாது. எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்” என்கிறார் ரவிசுந்தரபாரதி.ht444858

Related posts

இந்த உணவுகளை எல்லாம் வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா வெங்காயத்தின் அற்புதமான சில மருத்துவ குணங்கள்!!!

nathan

1 to 3 month pregnancy diet chart in tamil – 1 முதல் 3 மாத கர்ப்பகால உணவு திட்டம்

nathan

பாதாமை ப்ராஸஸ் செய்வது எப்படி???? ஆரோக்கியம் & நல்வாழ்வு!

nathan

vitamin b12 rich foods in tamil – Vitamin B12 நிறைந்த உணவுகள்

nathan

அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து கொள்வதால் இந்த மருத்துவ நன்மைகள் உண்டாகுமாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

மறதி நோய் வராமல் தடுக்கும் வால்நட்

nathan

தெரிஞ்சிக்கங்க…டார்க் சாக்லேட்டின் 10 ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் பி 3 சத்துகள் உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகள்!

nathan