29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

ஆரோக்கியமான நுரையீரல் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு போன்றவற்றால் சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

அதனால், நுரையீரலை சுத்தப்படுத்தும் பழங்கள், சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் உணவுகள் மற்றும் சுவாசத்தை சீராக்கும் உணவுகள் ஆகியவற்றை புகைப்பிடிப்போர் கட்டாயம் உண்ண வேண்டும்.

மாதுளை

மாதுளைப் பழங்கள் உடற்கூறுக்குறைகளை நீக்கவல்லவை. மேலும் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது. இதன் சாறு பல்வேறு உடல் நலம் தொடர்பான பயன்பாடுகளுக்கு உதவுகிறது.

lungs food 002

வெங்காயம்

வெங்காயம் கொஞ்சம் வாடை உள்ளது தான் மறுப்பதற்கில்லை. ஆனால், இதன் மணம் நுரையீரலை சீராக்குவதில் மிகச்சிறந்த ஒன்று. புகைப்பிடிப்போர் கண்டிப்பாக வெங்காயத்தை உண்டு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

lungs food 003

ஆப்பிள்

ஆப்பிள்களில் ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் ஈ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. இவையனைத்தும் சுவாச நலனில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை.

lungs food 004

கேரட்

கேரட்டுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதில் ஒரு ஆச்சரியமான முறையில் உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், நுரையீரல் நலனைப் பேணுவதில் மிகவும் உதவுகின்றன.

lungs food 005

நட்ஸ்

வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகள் உடற்கூறுக் கேட்டைத் தடுப்பதுடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது. இவை நுரையீரலை சுத்தம் செய்யும் சத்தான உணவாகும்.

lungs food 006

பீன்ஸ்

பீன்ஸ் கேன்சரைத் தடுக்கும் குணாதிசயங்களை கொண்டுள்ளதுடன், மக்னீசியத்தை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ளன. இது நுரையீரல் ஆரோக்கியமாகச் செயல்பட முக்கிய செயலாற்றுகின்றன.

lungs food 007

மஞ்சள்

மஞ்சளில் காணப்படும் கர்குமின் எனப்படும் வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை அழிப்பதுடன் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதையும் தடுக்கிறது.images (7)

Related posts

உற்சாகத்தை அளிக்கும் மூளைக்கான உணவு

nathan

சமையல் குறிப்பு டிப்ஸ்

nathan

தயிருடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிடுங்க போதும்

nathan

இந்த ஒரு பொருளுடன் அத்திப்பழம் சாப்பிட்டால் குண்டாகிடுவீங்க…தெரிஞ்சிக்கங்க…

nathan

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை

nathan

சுவையான பூசணிக்காய் சப்பாத்தி

nathan

வீட்டில் போடும் சாம்பிராணியில் இந்த பொருள்களை சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வெறும் வயிற்றில் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால்

nathan

விரும்பி சுவைக்கும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்

nathan