தேன், உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்க கூடிய இயற்கை இனிப்பு சுவை உணவு. பண்டையக் காலத்தில் இருந்தே உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது தேன். ஊட்டச்சத்து மிகுந்த இதன் மருத்துவ குணங்கள் இன்றியமையாதவை.
தேனில் க்ளுகோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சக்ரோஸ் போன்ற இனிப்புகள் இருக்கின்றன. க்ளுகோஸ் தான் இருப்பதிலேயே எளிய சர்க்கரை பொருள் ஆகும். இது, அனைத்து உயிரினங்களின் இரத்தத்திலும், காய்கறி மற்றும் பழங்களிலும் இருப்பதாய் கூறப்படுகிறது.
க்ளுகோஸ் மற்றும் ஃபிரக்டோஸின் கலவை தான் சக்ரோஸ். இதுப் போக டெக்ஸ்ட்ரின் (Dextrin) எனும் ஓர் பொருளும் தேனில் சிறிதளவு இருக்கிறது. இது, செரிமானத்தை சரிசெய்ய உதவுகிறது. உடல் எடை குறைக்கவும் கூட தேன் சிறந்த உணவாக இருந்து வருகிறது.
இவ்வளவு நன்மைகள் உள்ள தேனை சூடு செய்து சாப்பிட்டால் என்ன ஆகும் என உங்களுக்கு தெரியுமா???
செரிமான பிரச்சனை ஏற்படும்
தேனை சூடு செய்யும் போது, உடலுக்கு தேவையற்ற வகையில் இது உருமாறுகிறது. மற்றும் செரிமானம் செய்ய கடினமான பொருளாக தேன் மாறுகிறது என அறிவியல் கூறுகிறது.
எச்.எம்.எப்
தேனை சூடு செய்யும் போது, தேனில் எச்.எம்.எப் (Hydroxymethylfurfuraldehyde), எனப்படம் கெமிக்கல் வெளிப்படுகிறது. இது விஷத்தன்மை கொண்ட பொருள் ஆகும். மற்றும் புற்று உண்டாக்க கூடிய திறனுடையது இந்த எச்.எம்.எப்.
பெராக்ஸைட் (Peroxides)
மற்றும் தேனை சூடு செய்யும் போது, அதில் பெராக்ஸைட்களும் உருவாகின்றன. இது நமது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஓர் பொருள் ஆகும்.
மூலக்கூறுகள் பசை போல ஆகிறது
தேனை சூடு செய்வதால் செரிமானக் கோளாறு, மற்றும் நச்சுத்தன்மையுள்ள பொருள்கள் உருவாவதுடன். மூலக்கூறுகள் சளி அல்லது அடைப்பு, பசை போல ஆகிறதாம்.
சமைக்கக் கூடாது
உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துவிடும் என்பதால் தான் தேனை சூடு செய்து சாப்பிடக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது. பிரெட் போன்ற உணவில் கூட இடையில் தடவி சூடு செய்தல் கூடாது. தேனை அப்படியே சாப்பிடுவது தான் உடல்நலனுக்கு நல்லது.
சுடுநீரில் கலந்து சாப்பிடலாம்
ட்ரிங்க்ஸ் அல்லது சுடு நீரில் தாராளமாக தேனை கலந்து சாப்பிடலாம். ஆனால், கலந்த பிறகு மிதமான சூட்டிற்கு வந்த பிறகு உட்கொள்ளவும். கொதிக்கும் நிலையில் அல்லது அதிக சூட்டில் பருகுவதை தவிர்க்கவும்.
தேனின் நன்மைகள்
செரிமானம், மலம் பிரச்சனை, உடல் பருமன், குமட்டல், வாந்தி, தூக்கமின்மை, இரத்த சோகை, ஆஸ்துமா, கண் எரிச்சல் போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்க கூடியது தேன்.