32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
28 1440739123 3diet
எடை குறைய

நீங்கள் கட்டாயம் நம்பக்கூடாத சில உடல் எடை குறைப்பு டிப்ஸ்…

உடல் எடை குறைப்பு என்பது எல்லோர் மனத்திலும் இருக்கும் ஒன்றே. உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலமாக எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என அலையும் கூட்டத்தில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் உடல் எடையை குறைக்க உதவிடாத உணவுப் பட்டியலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். என்ன அதிர்ச்சியாக உள்ளதா?

ஆம், உடல் எடையைக் குறைக்க தண்ணீர் குடிப்பது உண்மையிலேயே சாத்தியமாகாது என்பதை ஒரு புதிய ஆய்வு காட்டியுள்ளது. தண்ணீர் என்பது உங்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்க உதவும் ஒரு பொருளாகும். அது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு உதவிடாது.

ஆரோக்கியமான உடற்பயிற்சியுடன் சேர்த்து தண்ணீரும் குடித்து வந்தால், நீங்கள் உடல் எடையை இழக்க தொடங்கிவிடுவீர்கள். அதேப்போல், வளமையான பழங்களை உட்கொள்வது உடல் எடையைக் குறைக்காது.

பழங்கள் என்பது ஆரோக்கியமானது மற்றும் கலோரிகள் குறைவானது தான் என்றாலும் கூட, உங்கள் எடை பார்க்கும் கருவியில் உங்கள் எடை குறைவாக காட்ட போவதில்லை. அதேப்போல் நீங்கள் நம்பக்கூடாத சில உடல் எடை குறைப்பிற்கான டிப்ஸ்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

சைவமாக மாறுதல்
சைவ உணவு உண்ணுபவராக மாறுவதால் கண்டிப்பாக உங்கள் உடல் எடை குறைய போவதில்லை. உணவு பழக்கத்தில் கொண்டு வந்த மாற்றத்துடன் சேர்த்து உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மட்டுமே உங்கள் உடல் எடையைக் குறைத்துவிடும் என நீங்கள் நினைத்தால் நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள்.

தண்ணீர் மட்டும் குடித்தல்
உணவை உண்ணாமல் வெறும் தண்ணீரை மட்டும் குடித்து வயிற்றை நிரப்ப வேண்டும் என்ற வழி கூட நீங்கள் நம்பக்கூடாத உடல் எடை டிப்ஸில் ஒன்று. காலி இடத்தை நிரப்பவே தண்ணீர் உதவுமே தவிர கலோரிகளை எரிக்க இல்லை.

உணவில் கார்ப்ஸை தவிர்த்தல்
உங்கள் உணவில் கார்ப்ஸை சேர்க்கவில்லை என்றால் எங்கிருந்து உங்களுக்கு ஆற்றல் திறன் கிடைக்கும்? நல்ல கார்ப்ஸை நீங்கள் தவிர்த்தால், நீங்கள் வலுவிழந்து சீக்கிரமே அயர்ந்து போவீர்கள். இது ஒரு வகையில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

இனிப்பு பண்டங்களைத் தவிர்த்தல்
உங்கள் உணவில் இருந்து இனிப்பு பண்டங்களைத் தவிர்ப்பதால் கண்டிப்பாக உங்கள் உடல் எடையை குறையாது. எச்சில் ஊற வைக்கும் இனிப்பு பண்டங்களையும் மிட்டாய்களையும் தவிர்க்க வேண்டுமென்றால் தவிர்க்கலாம். ஆனால் டார்க் சாக்லேட்களில் பல உடல்நல பயன்கள் அடங்கியிருப்பதால் அதனை தவிர்க்க வேண்டாம்.

நார்ச்சத்து உணவுகளை மட்டும் உண்ணுதல்
நார்ச்சத்து உணவுகள் குறிப்பிட்ட அளவிலான ஆற்றலை உங்களுக்கு அளிக்கும். அது செரிமானம் ஆகவும் உதவிடும். ஆனால் வெறும் நார்ச்சத்து உணவுகளை மட்டுமே உட்கொண்டு வந்தால், உடல் எடையை குறைப்பதற்கு அது சரியான வழியல்ல. நீங்கள் நம்பக்கூடாத மற்றொரு உடல் எடை குறைப்பு டிப்ஸ் இது.

சாலட் மட்டும்
உணவு கட்டுப்பாட்டை கடுமையாக பின்பற்றும் சிலர், உடல் எடையை குறைக்க சாலட் மட்டுமே உட்கொண்டு வருவார்கள். உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டுமானால், உங்கள் சாலட்டில் கொஞ்சம் புரதமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்; உதாரணத்திற்கு கோழி.

ஜூஸ் மட்டும்
உடல் எடையை குறைக்க ஜூஸை மட்டும் நம்பி வந்தால் அது உதவிடாது. உணவு பதார்த்தங்களையும் உங்கள் உணவு பட்டியலில் சேர்த்திட வேண்டும். இருப்பினும், உடல் எடையை குறைக்க அளவுக்கு அதிகமாக நற்பதமான ஜூஸ்களை குடிக்க வேண்டும்.

உடல் எடை குறைப்பு மாத்திரைகள்
உடல் எடையை குறைக்க மாத்திரைகளை உண்ணாதீர்கள். அவை உங்கள் உடல்நல ஆரோக்கியத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி, உடலை அழித்து விடும்.

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி
அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி மற்றும் குறைவான உணவு என்பது உடல் எடையை குறைக்க சரியான வழியல்ல. புத்திசாலித்தனமாக யோசித்து, சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து, ஒரு மணி நேர உடற்பயிற்சியில் ஈடுபட்டு, உடல் எடையை குறைத்திடுங்கள்.

கிராஷ் டயட்
நீங்கள் கிராஷ் டயட்டைப் பின்பற்றி வந்தால், கண்டிப்பாக நீண்ட நாட்களுக்கு அது பயனுள்ளதாக இருக்காது என்பதை நினைவில் வைத்திடுங்கள். குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு, நீங்கள் ஏற்கனவே இருந்த எடையை விட அதிகரிக்கவே செய்வீர்கள் என வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

28 1440739123 3diet

Related posts

உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் இதுதான்!

sangika

உங்கள் உடல் எடையை சீராக இருக்க இது மிகவும் முக்கியமானதாகும்!…

sangika

உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதும்!…

sangika

உடல் கொழுப்பு கரைய – முட்டைகோஸ் சூப்:!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்ட சில எடை இழப்பு குறிப்புகள்!

nathan

ஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா?

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்கும் போது உடலில் உண்டாக கூடிய மாற்றங்கள் என்னென்ன?

nathan

கவலைய விடுங்க…? உடல் பருமனை குறைப்பது எப்படினு கவலபடுரீங்கள…?

nathan

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்

nathan