24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024
201701171301417293 fruits vegetable mixed salad SECVPF
சாலட் வகைகள்

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு சாலட்டை சாப்பிடலாம். இன்று காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்
தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் – 100 கிராம்,
வெள்ளரிக்காய் – 2,
தக்காளி – 3,
ஸ்ட்ராபெர்ரி – 5,
ஆப்பிள் – 1,
கொய்யா – 1
மாதுளம் பழம் – 1
திராட்சை – 100 கிராம்
மிளகு தூள் – தேவைக்கு
தேன் – தேவைக்கு
எலுமிச்சை சாறு – தேவைக்கு

செய்முறை :

* ஸ்ட்ராபெர்ரி, தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* வெள்ளரிக்காய், கொய்யா, ஆப்பிளை பெரிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.

* முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக்கொள்ளவும்.

* மாதுளம் பழத்திலிருந்து முத்துக்களை உதிர்த்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், பழங்களை போட்டு அதனுடன் மிளகு தூள், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

* காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் ரெடி.201701171301417293 fruits vegetable mixed salad SECVPF

Related posts

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

nathan

முளைகட்டிய பச்சைப் பயறு – பப்பாளி சாலட்

nathan

தக்காளி சாலட்

nathan

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

nathan

காளான் தயிர் பச்சடி : செய்முறைகளுடன்…!

nathan

காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ் பழ சாலட்

nathan

பூசணிக்காய் தயிர் பச்சடி

nathan

வாழைத்தண்டு – மாதுளை ரெய்தா

nathan

உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்

nathan