மருத்துவ குறிப்பு

தினமும் சிறிது துளசி இலைகளை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள்!

மூலிகைகளின் தாய் மற்றும் ராணி தான் துளசி. இந்த சிறு இலை பல மகிமைகளைச் செய்யும். அதிலும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் மூலிகைகளில் துளசியை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது. இதற்கு அதில் உள்ள சத்துக்கள் தான் காரணம். குறிப்பாக துளசியை உட்கொண்டு வந்தால், சுவாச கோளாறுகளைத் தடுக்கலாம்.

மேலும் துளசி இலை சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவும். இந்த துளசியானது எண்ணெய் மற்றும் மாத்திரை வடிவங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இதன் இலைகளை பச்சையாக உட்கொண்டால், இதன் பலனை முழுமையாகப் பெறலாம்.

அதுவும் தினமும் காலையில் துளசி இலைகளை சிறிது உட்கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரைப் பருக வேண்டும். சரி, இப்போது தினமும் இப்படி துளசி இலைகளை உட்கொண்டால் என்ன பலன்களைப் பெறக்கூடும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தலைவலி அடிக்கடி தலைவலியை சந்திப்பவராயின், துளசி இலைகளை உட்கொண்டு வந்தால், அந்த தலைவலியில் இருந்து விடுபடலாம். துளசியில் உள்ள சக்தி வாய்ந்த இரத்தச் சேர்க்கை நீக்கும் பண்புகள் உள்ளதால், இவை தலைவலியைத் தடுக்கிறது. ஒற்றைத் தலைவலி, சைனஸ் மற்றும் மன அழுத்தத்தினால் தலைவலியை அனுபவித்தால், தினமும் துளசியை உட்கொண்டு வாருங்கள்.

காய்ச்சல் ஆங்காங்கு மழைப் பெய்வதால், காய்ச்சல் அடிக்கடி வரக்கூடும். அதுமட்டுமின்றி, தற்போது பலவகையான காய்ச்சல்கள் வருவதால், அவை எளிதில் மருந்து மாத்திரைகளால் போவதில்லை. ஆனால் இயற்கை வழிகளைப் பின்பற்றினால், உடலின் ஆற்றல் அதிகரிப்பதோடு, காய்ச்சலும் குறையும். அதுவும் காய்ச்சல் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு மூன்று முறை துளசி இலைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.

நோய்த்தொற்றுகள் உடலினுள் ஏதேனும் நோய்த்தொற்றுகள் இருந்தால், துளசி இலையை உட்கொண்டு வர, அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள், உடலினுள் உள்ள எந்த வகையான நோய்த்தொற்றுக்களையும் அழித்து வெளியேற்றிவிடும். முக்கியமாக சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.

சிறுநீரக கற்கள் சிறுநீரக கற்கள் இருந்தால், துளசி இலைகளை உட்கொண்டு வாருங்கள். அதிலும் காலையில் முதல் வேளையாக துளசி இலைகளை சிறிது வாயில் போட்டு நன்கு மென்று அதன் சாற்றினை விழுங்குங்கள். இதனால் அந்த சாறு சிறுநீரக கற்களை கரைத்துவிடும்.

வாய் ஆரோக்கியம் காலையில் பற்களை துலக்கியப் பின், சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு நன்கு மென்றால், ஈறுகளில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டாலோ, அவை குணமாகும்.

சளி, இருமல் தினமும் காலையில் துளசி இலையை உட்கொண்டவுடன் தண்ணீரை குடித்து வந்தால், அதில் உள்ள இருமல் அடக்கி பண்புகள் இருமலை குறைக்கும் மற்றும் சளி நீக்க பண்புகள் நெஞ்சில் உள்ள சளியை முறித்து எளிதில் வெளியேற்றிவிடும்.

நுரையீரல் தினமும் துளசி இலைகளை உட்கொண்டு வருவதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஏனெனில் துளசியில் பாலிஃபீனால்கள் நுரையீரலில் நெரிசல்கள் ஏற்படுவதைத் தடுத்து, சீராக சுவாசிக்க உதவும்.

நோயெதிர்ப்பு சக்தி துளசியில் உள்ள கிருமிநாசினி பண்புகள், பல்வேறு வைரஸ் தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும். மேலும் இதனை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமைப் பெறும். முக்கியமாக வாழும் வாழ்க்கையின் தரம் அதிகமாகும்.

13 1439442567 7 lungs

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button