22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
e7
ஆரோக்கிய உணவு

பூண்டு லேகியம்-மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்!

பூண்டு லேகியம்

தேவையானவை:

உரித்த பூண்டு – 200 கிராம்
துருவிய தேங்காய் – ஒன்று (அரைத்து பால் எடுத்து வைக்கவும்)
கருப்பட்டி – கால் கிலோ
இஞ்சி – 75 கிராம்
கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு
நல்லெண்ணெய் – 200 மில்லி
பசு நெய் – 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைத் தோல் நீக்கி நன்கு கழுவி, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி, அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு தெளிந்த இஞ்சிச் சாற்றை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். கருப்பட்டியைப் பொடித்துக்கொள்ளவும். பிறகு கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியைச் சேர்த்து அடுப்பில் வைத்து கரையும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும். பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து உரித்த பூண்டு, பெருங்காயம், தெளிந்த இஞ்சிச் சாறு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து ஆற விட்டு, நன்றாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதுடன் தேங்காய்ப்பால், கருப்பட்டி பாகு சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு பூண்டு-கருப்பட்டிக் கலவையைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு சுருள கிளறவும். இத்துடன் பசு நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கி ஆறவிட்டு, சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒன்றரை மாதம் வரை  வைத்துக்கொள்ளலாம். இதை இரண்டு நாட்கள் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும்.

குறிப்பு:

இஞ்சியை அரைத்து வடிகட்டும் போது, மேலாக தெளிவாக இருக்கும் சாற்றை மட்டும் எடுக்கவும். அடியில் வெள்ளை நிறத்தில் தங்கியிருக்கும் துகள்களை கொட்டி விடவும். லேகியம் கிண்டும் கரண்டியில் துளியும் ஈரம் இருக்கக் கூடாது. பரிமாறும்போது ஒரு முறை சூடாக்கி, பிறகு பரிமாறவும். இது வாய்வுத் தொல்லையை அறவே நீக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தாலும், உபயோகப்படுத்தும் முன், ஒரு முறை நன்கு சூடுப்படுத்தி பிறகு உபயோகப்படுத்தவும்.

e7

Related posts

மூட்டு வலிகளுக்கும் சர்க்கரை நோய்க்கும் அருமருந்தாகும் பூசணிக்காய்

nathan

முடி உதிர்வை தடுக்கும் முடக்கத்தான் கீரை!!

nathan

சளி, இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும் திப்பிலி டீ

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம்!!!

nathan

ப‌ச்சை ‌மிளகாயை பாதுகா‌க்க

nathan

உங்களுக்கு தெரியுமா முட்டையை விட அதிக சத்துக்கள் நிறைந்த சில உணவுப்பொருட்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் கொத்தவரங்காய்..!

nathan

இந்த நேவி பீன்ஸ் சாப்பிட்டிருக்கீங்களா? வாரத்துல ரெண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் இஞ்சி – கற்றாழை ஜூஸ்

nathan