201701071309247901 barley pongal SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான பார்லி வெண் பொங்கல்

டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் பார்லியை சேர்த்து கொள்வது நல்லது. பார்லியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான பார்லி வெண் பொங்கல்
தேவையான பொருட்கள் :

உடைத்த பார்லி – 1 கப்,
பாசிப் பருப்பு – கால் கப்,
ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை – சிறிது,
நெய் – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை.

செய்முறை :

* இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பார்லியையும், பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் லேசாக தனித்தனியே வறுத்து, சிறிது நேரம் ஊற வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் பார்லி, பாசிப்பருப்புக் கலவையும் சேர்த்து ஒன்றுக்கு 3 அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் போட்டு வேக வைக்கவும்.

* வெந்ததும் சூடாகப் பரிமாறவும்.

* சுவையான சத்தான பார்லி வெண் பொங்கல் ரெடி.201701071309247901 barley pongal SECVPF

Related posts

முள்ளங்கி புரோட்டா

nathan

உண்டி ஸ்டஃப்டு

nathan

சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி

nathan

குழந்தைகளுக்கான நூடுல்ஸ் – கார்ன் கட்லெட்

nathan

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய சுறா புட்டு

nathan

சேமியா பொங்கல்

nathan

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

nathan

சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan

10 நிமிஷத்தில் தித்திப்பான ஸ்வீட் ரெடி

nathan