32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
தலைமுடி சிகிச்சை

கூந்தல் பராமரிப்பு!

* முடி கொட்டுவது தொடர்ந்து கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
* தலை குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்.
* அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதேபோல் ஷாம்பு தேய்த்து குளிக்கும்போது முடியை நன்றாக அலசவும்.
* ஒவ்வொரு முறை தலை குளிக்கும்போதும் கன்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கன்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது. கன்டிஷனர் உபயோகிக்கும்போதும் முடியை நன்றாக அலச வேண்டும்.
* ஷாம்பு போட்டு தலைகுளித்தப் பிறகு, ஒரு தேக்கரண்டி விநிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அதனைக் கொண்டு தலைமுடியை அலசவும். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பளபளபாகவும் இருக்கும்.
* மருதாணி தலைமுடிக்கு மிகச்சிறந்த கன்டிஷனர். ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம். மருதாணியைத் தலையில் தேய்த்து ஊறவைத்த பிறகு ஷாம்பூ போடக் கூடாது.
* சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்.
* வாரத்திற்கு ஒருமுறையேனும் விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக மசாஜ் செய்யவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும்.

Related posts

வெள்ளை முடியால் தொல்லையா? இவற்றை பயன்படுத்தினாலே போதும்!

nathan

மழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பு அவசியம்

nathan

ஈரத்தலைமுடியைச் சீப்பால் சீவவே கூடாது. உதிராமல் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

கட்டுக்கடங்காமல் முடி வளர்வதற்கு 1 ஸ்பூன் கிராம்பு போதும்.தெரிந்துகொள்வோமா?

nathan

கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய் எண்ணெய்

nathan

சில டிப்ஸ் செம்பட்டை முடியினை கருமையாக்க

nathan

குளிர்காலத்தில் உங்க கூந்தல் பராமரிக்க சில டிப்ஸ்…

nathan

வாரத்திற்கு ஒரு முறையாவது வெந்தய குளியல் முடி வளர்ச்சிக்கு

nathan

இதோ எளிய நிவாரணம்! தலையில் ஏற்படும் பருக்களை போக்குவதற்கான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

nathan