24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld45869
தலைமுடி சிகிச்சை

கூந்தல்

என்சைக்ளோபீடியா – அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி

கூந்தல் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை சரி செய்யும் எளிதான 25 ஆலோசனைகளைப் பார்த்தோம். அவற்றின் தொடர்ச்சியாக இன்னும் 25 ஆலோசனைகள் உங்களுக்காக..!

ஒரு கப் தேங்காய்த்துருவலை நன்றாக அரைத்து கடாயில் போட்டு கொதிக்க விடவும். அதிலிருந்து பிரியும் தேங்காய் எண்ணெயை கொண்டு தினமும் தலைக்குத் தடவி வருவது முடிவளர்ச்சியை அதிகரிக்கும்.

நான்கு சின்ன வெங்காயத்தை அரைத்து வடிகட்டவும். முன் நெற்றி வழுக்கை வரும் அடையாளம் இருப்பவர்கள், வாரம் 1 முறை வெங்காயச்சாற்றை தலையில் தேய்த்து, வெந்தயத்தூள் கொண்டு அலசவும்.

சுருள் பட்டை, வெந்தயம், மிளகு இவை மூன்றையும் சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் வைக்கவும். நன்றாக ஊறியதும் தலையில் தேய்த்து வந்தால், தலைமுடி உதிர்வது நிற்கும்.

ஒரு டீஸ்பூன் ஓமம் எடுத்து வறுத்து நன்றாக பொடி செய்யவும். தலைமுடியை அலசும் போது இந்த பொடியை உச்சந்தலையில் தேய்த்து சிறிது தண்ணீர் விட்டு அலசவும். தலையில் நீர் கோர்த்து அவதிப்படுவோருக்கு தண்ணீரை எடுக்கும். அசிடிட்டியால் முடி உதிர்வது, பொடுகு வருவது போன்றவை சரியாகும்.

இளநீரில் உள்ள வழுக்கையை அரைத்து தலையில் தேய்த்து தலையை அலசுவது முடி வறட்சியைத் தடுக்கும்.

கடுக்காய் 100 கிராம், ஓமம் 50 கிராம், நெல்லிமுள்ளி 50 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் இவற்றை ஒன்றிரண்டாக பொடித்து 300 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் வைத்து எடுக்கவும். எண்ணெய் கருமையாக மாறும். இதை தினமும் தடவி வரும்போது நரைமுடி சிறிது சிறிதாக நிறம் மாறும்.

50 கிராம் அதிமதுரத்துடன் 50 கிராம் தேங்காய்ப் பால் கலந்து ஊறவைக்கவும். மறுநாள் நன்கு அரைத்து கிரீமாக செய்து, தலையில் தேய்த்து 2 மணி நேரம் ஊறவிடவும். இது வழுக்கையில் முடி வளரும் வாய்ப்பை 75 சதவிகிதம் அதிகரிக்கும்.

செம்பருத்திப் பூ, மகரந்தத்தை சேர்த்து 50 கிராம் அளவு எடுத்து வழுக்கையில் உள்ள இடத்தில் தேய்த்து அப்படியே விட்டுவிடவும். ஒரு நாள் முழுவதும் இருக்கும்போது வழுக்கை பிரச்னை மெல்ல மாறி, முடி வளரத் தொடங்கும்.

பூக்கள் மனஅழுத்தத்தை குறைக்கும். இவற்றை தைலம் தயாரித்து தினமும் தேய்த்து குளிப்பதும், தடவி கொள்வதும், மனஅழுத்தத்தினைக் குறைத்து முடி உதிர்வதைத் தவிர்க்கும். மரிக்கொழுந்து, ரோஜா, செண்பகப்பூ, சம்பங்கி, ஆவாரம் பூ, தாமரை என எதையும் உபயோகிக்கலாம். மல்லியை மட்டும் தவிர்க்கவும்.

100 கிராம் வேப்பங்கொட்டையை ஒன்றிரண்டாக உடைத்து இறுக்கமாக மூடி வைக்கவும். 100 மி.லி. நல்ெலண்ணெயை நன்றாக காய்ச்சி அதில் விடவும். 15 நாட்கள் வெயில்படாத இடத்தில் வைக்கவும். 15 நாட்கள் கழித்து வேப்ப எண்ணெய் மேலே வந்திருக்கும். 1/2 டீஸ்பூன் வேப்பெண்ணெயுடன், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி தலையில் நன்றாக தேய்த்து வரும்போது பேன், ஈறு பிரச்னை மாயமாகும்.

ஒரு டீஸ்பூன் வெந்தயத்துடன், ஒரு டீஸ்புன் துவரம் பருப்பை நைசாக அரைத்து குளிக்கும் முன் தலையில் வேர் பகுதி வரை நன்கு பூசி தடவிக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிக்கும் போது தேய்த்து கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடியின் வேர்ப்பகுதியில் வறட்சி ஏற்படாமல் எப்போதும் குளிர்ச்சியாக வைத்து இருக்கும். இது முடி உதிர்வதை தடுப்பதுடன் மீண்டும் வளர ஆரம்பிக்கும். இது போல் வாரம் 3 நாள் செய்ய வேண்டும்.

நூறு கிராம் கருப்பு எள்ளை வெந்நீரில் ஊற வைக்கவும். இதை அரைத்து விழுதாக்கி தலையில் தேய்த்து மிதமான சூடுள்ள தண்ணீரில் அலசுவது, தலைமுடியை கருகருவென வளர செய்யும்.

கறிவேப்பிலை, மருதாணி, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இவை எல்லாம் தலா 1 பிடி எடுத்து நன்கு அரைத்து ஒரு கடாயில் மூழ்கும் வரை நல்லெண்ணெயுடன் சேர்த்து ஓசை அடங்கும் வரை காய்ச்சவும். கடைசியில் சிறிதளவு வெட்டி வேர் போட்டு இறக்கவும். தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். உடல்நலமின்றி, சத்துக்குறைபாடால் பாதிக்கப்பட்டோருக்கு தலைமுடி பலவீனமாகிறவர்களுக்கு இது மிகச் சிறந்த சிகிச்சை.

3 டீஸ்பூன் தேங்காய்த்துருவலுடன், 3 டீஸ்பூன் கசகசா சேர்த்து அரைத்து பால் எடுக்கவும். இத்துடன் கடலைமாவு 2 டீஸ்பூன் சேர்த்து தலையை அலசவும். இது பொடுகை விரட்டும். கூந்தலை மிருதுவாக்கும்.

வில்வ இலை 4, துளசி 4, செம்பருத்தி 4 அனைத்தையும் அரைத்து சாறு எடுக்கவும். இதில் அரை டீஸ்பூன் புங்கங்காய்த்தூள் கலந்து தலையை அலசவும். மருந்துகள் எடுத்துக் கொள்வதால் கூந்தல் வளர்ச்சியில் ஏற்படுகிற பக்க விளைவுகளைத் தவிர்க்கும்.

சீயக்காய் அரை கிலோ, பயத்தம் பருப்பு கால் கிலோ, வெந்தயம் கால் கிலோ, பூலாங்கிழங்கு 100 கிராம் எல்லாவற்றையும் மெஷினில் கொடுத்து அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர, கூந்தல் வளர்ச்சி தூண்டப்படும். முரட்டுக்கூந்தல் மிருதுவாகும்.

உலர வைத்த ஒற்றை செம்பருத்திப்பூ 100 கிராம் எடுத்து 300 மி.லி. தேங்காய் எண்ணெயில் சேர்த்து குறைந்த தணலில் வைத்து ஓசை அடங்கும் வரை கொதிக்க விடவும். பிறகு 50 கிராம் வெட்டி வேர் துண்டு சேர்க்கவும் (இது எண்ணெயைத் தெளிவாக்கும்). இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.

உலர வைத்த ஒற்றை செம்பருத்திப்பூ 100 கிராம் எடுத்து 300 மி.லி. தேங்காய் எண்ணெயில் சேர்த்து குறைந்த தணலில் வைத்து ஓசை அடங்கும் வரை கொதிக்க விடவும். பிறகு 50 கிராம் வெட்டி வேர் துண்டு சேர்க்கவும் (இது எண்ணெயைத் தெளிவாக்கும்). இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.

கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் அரைத்த விழுது 100 கிராம், வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை தலா 50 கிராம் மூன்றையும் கலந்து கடாயில் போட்டு மூழ்கும் அளவு நல்லெண்ணெய் விடவும். காய்ச்சி தைலம் தயாரிக்கவும். 2 நாட்கள் கழித்து வடிகட்டி, தலையில் தேய்த்துக் குளிக்கவும். முடி வளர்ச்சிக்கு மிக உகந்தது.

ஓமம், மிளகு, கறிவேப்பிலை தலா 50 கிராம், கடுகு 10 கிராம் எல்லாவற்றையும் பொடித்து சேர்த்து ஒரு துணியில் கட்டவும். இதை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிடவும், கொதித்ததும் துணியில் கட்டிய மூட்டையை தண்ணீரில் சேர்க்கவும். டர்கி டவலை அதில் நனைத்து பிழிந்து தலையில் சுற்றி எடுத்தால் தலைவலி தலைபாரம் நிற்கும். கூந்தலுக்கும் ஆரோக்கியம் சேர்க்கும்.

கரிசலாங்கண்ணிச் சாறு, சோற்றுக்கற்றாழை ஜெல் இரண்டும் சம அளவு எடுத்து 2 மடங்கு தேங்காய் எண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். தைலம் பதம் வந்ததும் இறக்கவும். இதை தினமும் தலைக்குத் தடவினால் முடிப் பிளவு மற்றும் உதிர்வது சரியாகும்.

ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய்ப் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்­ணீரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டு வரவும். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும்.

வறண்ட கூந்தலுக்கு ஒரு சிகிச்சை…பயத்தம் பருப்பு, வெந்தயம், செம்பருத்திப் பூ, பூலாங்கிழங்கு தலா 50 கிராம் எல்லாம் சேர்த்து அரைத்து சலித்து, தலைக்குத் தேய்த்துக் குளிப்பது கூந்தல் வறட்சியைப் போக்கும். முடி மிருதுவாகும்.

சாதாரண கூந்தலுக்கு ஒரு சிகிச்சை…தேங்காய்ப் பால் கால் கப், ஓமத்தூள், கடலை மாவு தலா 20 கிராம், வெந்தயத் தூள் 10 கிராம் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கண்டிஷனராக உபயோகிப்பது முடிக்கு நல்ல அடர்த்தியையும் வளர்ச்சியையும் தரும்.

எண்ணெய் பசைக் கூந்தலுக்கு ஒரு சிகிச்சை… கடலைப்பருப்பு, வெட்டி வேர், செம்பருத்தி, பூலாங்கிழங்கு தலா 50 கிராம் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து உபயோகிப்பது அதீத எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
ld45869

Related posts

முடி கொட்டுவது நிற்க சில இயற்கை வழிமுறைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் வழுக்கை தலையில் முடி வளர தயிரை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

உங்களுக்கு தெரியுமா இளநரை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா…?

nathan

உங்களுக்கு தெரியுமா வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பொருட்களை கலந்து இப்படி தடவினா போதும்!

nathan

எளிமை… வலிமை… கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை!

nathan

பேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்

nathan

இந்த பழக்கங்கள் உங்கள் கோடைகால முடி ஆரோக்கியத்தை முற்றிலும் கெடுத்துவிடும்.

nathan

உங்களுக்கு தெரியுமா கூந்தல் வறட்சியைப் போக்கும் சிறப்பான சில முட்டை மாஸ்க்குகள்!!!

nathan

வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க… வழுக்கையில் உடனே முடி வளரும்!…

nathan