தலைமுடி சிகிச்சை

இயற்கை முறையில் முடியை கையாள எளிமையான 3 டிப்ஸ் உங்களுக்காக! அடிக்கடி முடி கொட்டுதா?

முடி   பிரச்சனை  காலத்திற்கும்  தீராத ஒன்றாக மாறிவிட்டது.  அதிகம் நேரம் செலவிடுவதும், அதிக   பணம் செலவிடுவதும் நமக்கு சலிப்பாக   இருக்கும். இந்த நீங்கள் கவலைப்பட வேண்டாம்   தோழிகளே! உங்கள் முடியின் உதிர்வை குறைத்து முடியை   வளர வைக்க நீங்கள் வீட்டிலேயே சில இயற்கை அழகு குறிப்புகளை   கையாளலாம்.

 பீட்ரூட் :

  • பொதுவாக   எல்லாவிதமான   அழகு குறிப்புகளிலும்   சொல்வார்கள். நமது உடலுக்கு  சமையலறை ஆரோக்கியத்தை தருவது   மட்டுமில்லமல், நம் அழகையும் பராமரிக்க   உதவுகின்றது என, அது உண்மைதான்.
  • நம்   உடலில்   உள்ள ஊட்டச்சத்து   குறைப்பாட்டை தீர்க்க   பீட்ரூட் மிகுந்த அளவில்   உதவி புரிகின்றது. இதன் வழியாக   முடி கொட்டுதலை தவிர்க்க படுகின்றது.   இதற்காக உங்கள் உணவில் பீட்ரூட்- ஐ அதிகமாக   சேர்த்துக் கொள்ளலாம். இதனால் முடி உதிரும் பிரச்சனைக்கு   தீர்வு கிடைக்கும்.
  • இதை   பொறியலாகவோ, சட்னியாகவோ  செய்து சாதத்துடன் பிசைந்து   உண்ணலாம். வாரத்திற்கு இதை மூன்று  முறை எடுத்துக் கொள்ளலாம்.beetroot1

க்ரீன் -டீ :

க்ரீன் -டீ    குடிப்பதன் மூலம்  முடியின் வேர்களுக்கு  அது ஊட்டமளிக்கிறது. நம்   கூந்தலின் வளர்ச்சிக்கு உற்பத்தியை ஊக்குவிக்க   செய்கின்றது. உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க   செய்து, முடியின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்கின்றது.

நெல்லிக்காய் :

  • முடி   கொட்டுவதற்கான   காரணங்களில் ஒன்று   வைட்டமின்-சி குறைவாக   இருப்பதே. அதற்கு நீங்கள்   நெல்லிக்காயை உபாயகப்படுத்தலாம். நெல்லிக்காயை   ஆம்லா என்றும் சொல்வார்கள்.
  • இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், ஆண்டி பாக்டீரியாக்கள்   போன்ற பண்புகள் இருப்பதால் பொடுகுத்தொல்லையிலிருந்து   நம்மை விடுவிக்க செய்கின்றது. நெல்லைக்காய் பயன்படுத்தி  தயாரித்த மூலிகை எண்ணெய் மற்றும் இயற்கை வழியில் கிடைக்க  கூடிய எண்ணெய்யை நீங்கள் முடிக்கு பயன்படுத்தலாம்.
  • வழுக்குதலையின்   தொற்று பாதிப்பிலிருந்து   நம்மை தடுக்க செய்யும். முடியின்  வேர்க்கால்களுக்கு இந்த எண்ணெய்யை  நன்றாக தடவினால் அது முடிக்கு ஊட்டச்சத்து தருவது    மட்டுமில்லாமல், முடியின் வேர்க்கால்களை வலிமையாக வைக்க  உதவுகிறது.
  • முடியை  வலிமையாகவும்,  பளபளப்புடன் வைக்க  உதவுகின்றது. தினமும்  நெல்லிக்காய் ஒன்று நீங்கள்  சாப்பிடும் பழக்கம் வைத்துக் கொள்ளலாம்.nellikai thokku1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button