31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய் வீட்டிலேயே தயாரிக்க…..

கடுமையான முடி உதிர்வு, ஆங்காங்கே சொட்டை, பொடுகுத் தொல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு, இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு உதவும். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை: செம்பருத்தி பூ – 5 இதழ்கள், செம்பருத்தி இலை – 5, தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.

செய்முறை: தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழ்களையும் இலைகளையும் கழுவி, ஈரமில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். நீர் விடக் கூடாது. நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெய்யை அடுப்பில் சூடுபடுத்தி அதில், செம்பருத்தி பேஸ்ட்டை அதில் போடவும். 1 ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்க்கவும். நுரை அடங்கியதும் இறக்கி ஆற விடுங்கள். பின்னர் வடிகட்டி இந்த எண்ணைய்யை பாட்டிலில் சேகரித்து வைத்துப் பயன்படுத்தலாம். இதனை தினமும் உபயோக்கிக்கலாம். முடியின் வேர்கால்களை தூண்டும்படி ஸ்கால்ப்பில் 1 ஸ்பூன் அளவு தேய்த்து வாருங்கள். முடியின் வேர்ப்பகுதியில் மட்டும் தடவுவதால் பிசுபிசுப்பு இருக்காது.

இவ்வாறு செய்து வந்தால், வேர்கால்கள் வலுப்பெற்று, மிருதுவான, மின்னும் கூந்தல் கிடைக்கும். கூந்தல் உதிர்வது நின்று விடும். பொடுகையும் விரட்டலாம்.

Related posts

தினமும் எண்ணெய் தேய்ப்பது கூந்தலுக்கு நன்மை

nathan

முடியை மீண்டும் வேகமா வளர வைக்க நீங்க ‘இந்த’ வீட்டு வைத்தியங்கள செஞ்சா போதுமாம்!

nathan

பொடுகை நீக்கும் வேப்பம்பூ

nathan

கூந்தல் வளர்க்கும் 10 உணவுகள்

nathan

முடி நுண் பவுடர் / டெக்ஸ்ச‌ர் பவுடரினால் ஏற்படும் 12 அற்புதமான‌ நன்மைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! இளநரையை விரட்டணுமா? அப்ப இதை முயன்று பாருங்கள்…

nathan

இளநரை ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள்

nathan

சுருட்டை முடி பராமரிப்பு எப்படி?

nathan

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan