32.4 C
Chennai
Monday, May 12, 2025
27 1472277457 1 hair fall
தலைமுடி சிகிச்சை

தலைக்கு நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!

இன்றைய காலத்தில் ஒவ்வொருவருக்கும் தலைமுடி பிரச்சனை உள்ளது. இதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை காரணங்களாகும். மேலும் தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காமல், தலைமுடி வலுவிழந்தும், ஆரோக்கியமிழந்தும் உள்ளது.

எனவே முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களால் தலைமுடியைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அதில் ஒன்று தான் நெல்லிக்காய் எண்ணெய். இந்த எண்ணெயால் தலைமுடி பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

இப்போது நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க…
தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஷாம்புவுடன் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள். இதனால் ஸ்கால்ப் வறட்சியடைந்து, முடி உடைவது தடுக்கப்படும்.

பட்டுப்போன்ற முடியை பெற….
தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், நீரில் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து பின் அலச வேண்டும். இதனால் முடி பட்டுப் போன்று இருக்கும்.

கடினமான முடியைத் தடுக்க…
தலைக்கு ஷாம்பு பயன்படுத்ய பின், சிறிது நெல்லிக்காய் எண்ணெயை முடியின் முனைகளில் தடவ வேண்டும். இதனால் முடி வறட்சியடைந்து மென்மையிழந்து காணப்படுவதைத் தடுக்கலாம்.

பொடுகைப் போக்க…
பொடுகுத் தொல்லையால் அடிக்கடி அவஸ்தைப்படுபவர்க்ள, நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், பொடுகு வருவதை முற்றிலும் தடுக்கலாம்.

முடி வெடிப்பைத் தடுக்க…
நெல்லிக்காய் எண்ணெய் முடி வெடிப்பைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் முடியின் முனைகளில் தடவி வர, பாதிக்கப்பட்ட முடியின் முனைகள் சரிசெய்யப்பட்டு, முடி வெடிப்பது தடுக்கப்படும்.
27 1472277457 1 hair fall

Related posts

வெயில் காலத்தில் தலையை பராமரிக்கும் விதம் !அழகின் ரகசியம்!!

nathan

கூந்தலில் நுரை வந்ததும், அழுக்கு நீங்கிவிட்டதாக எண்ணி முடியினை அலசி விடுகிறோம்

nathan

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டுமா…..

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பொடுகுதொல்லையா? யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க… இரண்டே நாளில் போயிடும்…!

nathan

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?

nathan

முடி வளர…. பாட்டி மருத்துவம்

nathan

கரிசலாங்கன்னியை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுவாதற்கு !

nathan

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் ஜெல் தயாரிப்பது எப்படி? எளிய முறை

nathan

கூந்தலின் நிறம்

nathan