25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201701020846082833 Chettinad style ladies finger Mandi Vendakkai puli mandi SECVPF 1
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி

வெண்டைக்காயுடன் புளி சேர்த்து செய்யும் இந்த வெண்டைக்காய் மண்டி சூப்பராக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி
தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 1 1/2 கப்
சின்ன வெங்காயம் – 1 கப்
பூண்டு – 8 பல்
தக்காளி – 1
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
ஊற வைத்து கழுவிய அரிசி நீர் – சிறிது

தாளிப்பதற்கு.

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஊற வைத்து கழுவிய அரிசி நீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து, அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு வாணலியில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெண்டைக்காய் பாதியாக வெந்ததும் அத்துடன் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

* சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி ரெடி.201701020846082833 Chettinad style ladies finger Mandi Vendakkai puli mandi SECVPF

Related posts

செட்டிநாடு இறால் சுக்கா

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா

nathan

செட்டிநாட்டு பட்டாணி மசாலாப் பொரியல்

nathan

செட்டிநாடு சிக்கன் கிரேவி

nathan

செட்டிநாடு மசாலா சீயம்

nathan

தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

nathan

செட்டிநாடு மட்டன் குருமா செய்முறை விளக்கம்

nathan

செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்வது எப்படி

nathan

சிக்கன் செட்டிநாடு

nathan