31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
எடை குறைய

எளிய முறையில் உடல் எடையை குறைக்க வேண்டுமா

உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம்.
கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.

சேர்க்க வேண்டிய உணவுகள்:

► 6.00 AM
GREEN TEA – யை பால், சர்க்கரை இல்லாமல் காய்ச்சிய சுடு நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து பருக வேண்டும்.

► 8.00 AM
வேக வைத்த பாசிப்பயிறு (அ) கொண்டைகடலை, சுண்டல் (அ) காணப்பயிறு + ஒரு கப் பச்சை காய்கறிகள்.

► 11.00 AM
முட்டைகோஸ் சூப் (அ) காய்கறி சூப்.

► 1.00 PM
ஒரு கப் சாதம் + ஒரு கப் காய்கறிகள் + ஒரு கப் கீரை.

► 4.00 PM
GREEN TEA + ஒரு ஆப்பிள் (அ) ஒரு ஆரஞ்சு (அ) ஒரு கொய்யா (அ) ஒரு கீத்து பப்பாளி.

► 7.30 PM
கம்பு (அ) கேப்பை (அ) கேழ்வரகு தோசை (2 NOS) + தக்காளி சட்டினி மட்டும்.

தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:

கோதுமை, ஓட்ஸ், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகள், மற்றும் கிழங்குகள், இனிப்பு வகைகள், பேக்கரி வகைகள், பொறித்த உணவுகள், தேங்காய், மட்டன், முட்டை, சிக்கன், மீன், பால் பொருட்கள், இனிப்பு வகையான பழங்கள் ( வாழை, சப்போட்டா, திராட்சை, மாம்பழம், பலாப்பழம்), பேரிட்சை, பருப்பு ( முந்திரி, பாதாம், பிஸ்தா), கூல்ட்ரிங்க்ஸ், சாக்கலேட்ஸ், பிஸ்கட்ஸ், ஐஸ்கிரீம், பார்லி, எண்ணெய் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள்.

உடற்பயிற்சி :
அதிகமாக எதுவும் இல்லை
அதிகாலையில் எழுந்து 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொண்டாலே போதும்

உடல் எடையை குறைத்த பின்னர் சரிவிகித உணவும், சீரான உடற்பயிசியும் அவசியம் தேவை. அப்பொழுது தான் குறைத்த எடையை கூடாமல் சீராக வைத்துக் கொள்ள முடியும்

Related posts

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் திரவ டயட்!! இதப் பத்தி தெரிஞ்சுக்கோங்க!!

nathan

இதற்குப் பெயரே 100 மைல் டயட்…..

sangika

வேகமாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்!

nathan

எடை குறைய வெந்தயம் சாப்பிடுங்க!

nathan

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்….!!!

nathan

உடற்பருமனை குறைக்க Dr.க.சிவசுகந்தன் இன் நீங்கள் செய்யவேண்டியவை சில தகவல்கள்

nathan

To control your weight – உடல் எடை அதிகரிப்பதை தடுக்க

nathan

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க.

nathan

உங்க நீர் உடம்பை எளிதில் குறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan