31.6 C
Chennai
Friday, Jul 25, 2025
19 1482138104 weight
எடை குறைய

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்….!!!

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால…ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.weightloss 26 1498469862

Related posts

ஆண்களின் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்

nathan

உடல் எடையை குறைக்க நினைக்கும்போது பொதுவாக செய்யும் தவறுகள்

nathan

உடல் எடையை குறைக்க வித்யாசமான வகையா ஸ்நேக்ஸ் சாப்பிடுங்க!!

nathan

உடல் கொழுப்பை குறைக்க வேண்டுமா..? இது ஈசியான மருந்து..!

nathan

பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்

nathan

ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க அன்னாசிப்பழம் டயட் ஃபாலோ பண்ணுங்க!

nathan

எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.

nathan