சிலருக்கு தூசு என்றால் அலர்ஜியாக இருக்கும், சிலருக்கு புகை என்றால் அலர்ஜியாக இருக்கும், இது போல மது, சூட்டை கிளப்பும் உணவுகள், கடல் உணவுகள் என எத்தனையோ வகையில் அலர்ஜிகள் ஏற்பட்டு பார்த்திருப்போம்.
ஏன் உங்களுக்கே கூட சில அலர்ஜிகள் தோன்றியிருக்கலாம். ஆனால், ஆண்களின் விந்தணுக்களால் கூட பிறப்புறுப்பில் அலர்ஜிகள் ஏற்படும் என உங்களுக்கு தெரியுமா???
12% பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் ஏறத்தாழ உடலுறவில் ஈடுபடும் பெண்களில் 12% பெண்கள் விந்தணு அலர்ஜியால் பாதிக்கப்படுகிறார்கள். பலருக்கும் இது, விந்தணுக்களால் ஏற்படும் பாதிப்பு என்பதே தெரிவதில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பால்வினை நோயா?? விந்தணு அலர்ஜியால் பிறப்புறுப்பில் தாக்கம் ஏற்படும் நபர்கள், தங்களுக்கு பால்வினை நோய் தாக்கம் ஏற்பட்டுவிட்டதோ என அச்சம் கொள்கின்றனர். ஆனால், இந்த அச்சம் தேவையில்லை, இது சாதாரண அலர்ஜியை போன்றது தான் என கூறப்படுகிறது.
விந்தணு புரதம் ஆண்களின் விந்தணுவில் உயர்ரக புரதம் இருக்கிறது. இது சில பெண்களின் உடலுக்குள் செல்லும் போது, ஆரம்பத்தில் ஒத்துபோவதில்லை. அவர்களது உடல் செல்கள் இதை எதிர்க்க முற்படும் போது முதலில் இது போன்ற அலர்ஜிகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். காலப்போக்கில் இது சரியாகிவிடும்.
சரியான நேரத்தில் பரிசோதனை ஆனால், இது போன்ற அலர்ஜி பிறப்புறுப்பில் ஏற்படுகிறது என தெரிந்தால், உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள், வேறு சில தொற்றுகளால் கூட பெண்களின் பிறப்புறுப்பில் அலர்ஜிகள் ஏற்படலாம்.
20 முதல் 30 வயது பெண்கள் இந்த விந்தணு அலர்ஜி பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு தான் ஏற்படுகிறது என மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைகழகத்தின் இனப்பெருக்க அறிவியல் பேராசிரியர் டாக்டர். மைக்கேல் கர்ரோல் கூறியுள்ளார்.
விந்தணு அலர்ஜி அறிகுறிகள் பெண்களின் பிறப்புறுப்பு இடத்தில் சிவந்து காணப்படுவது, வீக்கம், வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றை மருத்துவர்கள் விந்தணு அலர்ஜியின் அறிகுறிகள் என கூறுகிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் அறிகுறி விந்தணு அலர்ஜி ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் அறிகுறிகள் உடனே தோன்ற ஆரம்பிக்கும் எனவும் டாக்டர் மைக்கேல் கூறியுள்ளார்.
வெவேறு நபர்களுடன் உறவுக் கொள்ளுதல் வெவ்வேறு நபர்களோடு உடலுறவில் ஈடுபட்டால் கூட இது போன்று விந்தணு அலர்ஜி ஏற்படலாம் எனவும் கூறுகிறார்கள்.