30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

பல்களிலுள்ள மஞ்சள் நிற காவிகளை போக்க நேச்சுரல் டூத் பேஸ்ட் தயாரிப்பது எப்படி தெரியுமா?

ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. வாயில் பிரச்சனைகள் இருந்தாலே, உடலில் பிரச்சனைகளின் அளவு அதிகரிக்கும். சொல்லப்போனால் வாய் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், இதய நோய், பக்கவாதம், சுவாச பிரச்சனைகள் மற்றும் டிமென்ஷியா போன்றவை வரும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
ஆனால் தற்போது விற்கப்படும் டூத் பேஸ்ட்களில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் அமிகம் உள்ளது. இதுவே உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே வாயில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் போக்கும் நேச்சுரல் டூத் பேஸ்ட் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து பயன்படுத்தி நன்மைப் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

எலுமிச்சை அல்லது புதினா எண்ணெய் – 15-30

துளிகள் பேக்கிங் சோடா – 2-3 ஸ்பூன்

செய்முறை:
முதலில் அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது டூத் பேஸ்ட் தயார்.

எப்படி பயன்படுத்துவது?
தயாரித்து வைத்துள்ள கலவையை, சாதாரண டூத் பேஸ்ட் பயன்படுத்துவது போன்றே பயன்படுத்த வேண்டும்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்து வந்தாலும், வாயில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.

பயன்படுத்தும் முறை
வாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, 20 நிமிடம் கொப்பளித்து, பின் வாயைக் கழுவ வேண்டும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

குறிப்பு
இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, தினமும் இரண்டு வேளை தேங்காய் எண்ணெயால் வாயைக் கொப்பளியுங்கள்.

Related posts

கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பல உடல் நலப்பிரச்னைகளும் உண்டு……

sangika

கல்லீரலில் பிரச்சனை எதுவும் வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அலுவலக பணிகளில் பெண்களின் பங்கு

nathan

மாணவர்களே நம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை திட்டுக்களை ஈஸியாக போக்க கை கண்ட நாட்டு மருந்து இதுதாங்க..!

nathan

பெண்களின் வாழ்க்கையை வளமாக்கும் நண்பர்கள்

nathan

உங்களுக்கு முழங்கால் வலி, இடுப்பு வலி ஆயுசுக்கும் வராம இருக்கணுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…வயிற்றில் குழந்தை எப்போது உதைக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு முடக்குவாதம் வரப்போகுதாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan