28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம் குறிப்புகள்கர்ப்பிணி பெண்களுக்கு

குழந்தை நோய் தொற்றில் இருந்து பாதுக்க

Baby-getting-vaccinated

ச்சிளங்குழந்தைகளை பராமரிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு கவனமாக இல்லாமல் இருந்தால், குழந்தைகளை விரைவில் நோயானது தாக்கும்.

ஏனெனில் அப்போது குழந்தைகளின் உடலில் போதிய நோய் எதிர்ப்பு சக்தியானது இருக்காது. மேலும் ஒவ்வொரு தாயும் குழந்தை பிறந்தவுடன் அவர்களை எவ்வாறு பார்த்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருப்பார்கள்.

அவ்வாறு பார்த்துக் கொள்ள தெரியாதவர்கள், அவர்களது தாயை அழைத்து, அவர்களுடன் கொஞ்ச நாட்கள் தங்கி, குழந்தைகளை பார்த்துக் கொள்வர்.
ஆனால் கடல் தாண்டியோ அல்லது வேறு ஊர்களில் இருக்கும் தனியாக இருக்கும் போதோ, அந்த நேரத்தில் அவர்களுக்கு எவ்வாறு பச்சிளங்குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாமல் தவிப்பார்கள். அத்தகைய தாய்களுக்கு குழந்தைகளை எவ்வாறு பார்த்து கொண்டால், என்ன உணவெல்லாம் கொடுத்தால், குழந்தை நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை சற்று தெரிந்து கொள்ளுங்களேன்…

 

  • பச்சிளங்குழந்தையை குளிப்பாட்டும் போது, வெதுவெதுப்பான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். அதிலும் அந்த நீரில் வேப்பிலையை போட்டு குளிப்பாட்டினால், குழந்தைகளை எந்த நோயும் தாக்காது.
  • மாதத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு வெந்தயம் 1 ஸ்பூன், வேப்பிலை 4, துளசி இலை 4 ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து, குழந்தையின் தலையில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிப்பாட்டி வந்தால் குழந்தைகள் உடலில் இருக்கும் சூடு குறையும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை கிருமிகளும் அண்டாமல் இருக்கும்.
  •  துளசி நோய்களுக்கு மிகவும் சிறந்த மருந்து. அதற்கு துளசியை நன்கு சுத்தமாக கழுவி, ஆவியில் காட்டி, கசக்கி பிழிந்து சாற்றை எடுத்து, அதனை குழந்தைகளுக்கு தினமும் குளித்தப்பின் அல்லது வாரத்திற்கு 3 முறை கொடுத்து வந்தால், அவ்வப்போது வரும் நோய்கள் அனைத்தும் சரியாகும்.

 

  • வேப்பிலையின் கொழுந்து சிறிது, இரண்டு மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை நன்கு நைஸாக தண்ணீர் விட்டு அரைத்து கொண்டு, எண்ணெய் வைத்து குழந்தைக்கு குளிப்பாட்டியப் பின், அந்த அரைத்த கலவையை ஒரு சுண்டைக்காய் அளவு எடுத்துக் கொண்டு, வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுத்து வந்தால், குழந்தையை எந்த ஒரு நோயும் தாக்காமல், ஆரோக்கியமாக இருக்கும்.
  • குழந்தைகளை குளிப்பாட்டும் போது, அந்த தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் டெட்டால் கலந்து கொண்டு குளிப்பாட்ட வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு எந்த ஒரு சரும நோயும் வராது. ஆகவே இவ்வாறெல்லாம் செய்து பராமரித்து வந்தால், குழந்தையை எந்த ஒரு நோயும் அவ்வளவு சீக்கிரம் தாக்காது, குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்

Related posts

ஏ.சி.யிலேயே இருந்தால் நிரந்தர நோயாளி

nathan

ஆரம்பம் முதலே சரியான முறையில் கடைப்பிடித்தால் சுகப்பிரசவம் எளிதாகும்.

nathan

பிரசவ வலி (Labour pain)

nathan

வீடு முழுக்க கொசு தொல்லையா? விரட்டி அடிக்க இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

காலில் தங்க கொலுசு போடக்கூடாது – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கரும்புள்ளிகளை நீக்கும் வீட்டு வைத்தியம்!

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்

nathan

அழகுக்கு அழகு சேர்க்க

nathan

மாதவிலக்கு பிரச்னைகளுக்கான மருத்துவம்

nathan