30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அசைவ வகைகள்

பேபி கார்ன் 65

மாலையில் மொறுமொறுவென்று சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்படியெனில் அப்போது வீட்டில் பேபி கார்ன் இருந்தால், அதனைக் கொண்டு 65 செய்து சாப்பிடுங்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த பேபி கார்ன் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பேபி கார்ன் – 8 (சிறியது) சாட் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

மாவிற்கு… மைதா – 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன் தயிர் – 3 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் சமையல் சோடா – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு

சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன் தயிர் – 3 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் சமையல் சோடா – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் பேபி கார்னை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி கார்ன்னை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து மேலே சாட் மசாலாவைத் தூவினால், பேபி கார்ன் 65 ரெடி!!!

Related posts

சுவையான முட்டை மிளகு மசாலா

sangika

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

புதினா சிக்கன் குழம்பு

nathan

புதினா ஆம்லேட்

nathan

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை விளக்கம்

nathan

முட்டை அவியல்

nathan

சுவையான ஐதராபாத் மட்டன் மசாலா

nathan

சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு

nathan

மீன் பிரியாணி

nathan