25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
201612091407339566 Healing Foods anemia SECVPF
ஆரோக்கிய உணவு

இரத்த சோகையை குணப்படுத்தும் உணவுகள்

இரத்த சோகை உள்ளவர்கள் இரத்தம் விருத்தியாக்க போதிய ஊட்டம் மிகுந்த உணவுகளை உண்டாலே போதும். அவை எந்தவகை உணவுகள் என்று பார்க்கலாம்.

இரத்த சோகையை குணப்படுத்தும் உணவுகள்
இரத்தம் குறைவது போதிய அளவு ஊட்டச்சத்து சாப்பிடாததும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளும் காரணமாகும். இரத்தம் சுத்தகரிக்காமல் இருந்தாலும் இரத்த உற்பத்தி குறைந்து போகும்.

இதனால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக்கோளறுகள் போன்றவை உண்டாகலாம். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகும்.

நாவல் பழத்தை தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி உண்டாகும். நினைவாற்றல் பெருகும்

தக்காளிப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

வாரம் இருமுறை பீட்ரூட் ஜூஸ் மற்றும் பொரியல் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

அடிக்கடி உணவில் மட்டன் மண்ணீரலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.

தேனில் பேரீச்சம்பழத்தை ஊறவைத்து அதை தினமும் காலையில் 3 அல்லது 4 பழங்களை சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். அல்லது தினமும் வெறும் பேரீச்சம்பழத்தை 10 எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலனை காணலாம்.201612091407339566 Healing Foods anemia SECVPF

Related posts

தெரிஞ்சிக்கங்க…உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் 10 சைவ உணவுகள்!!!

nathan

உடல்பருமனில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க… எடை குறைப்பு உணவு 30 வகைகளை இங்கே

nathan

தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்தி, தோல் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கும்.

nathan

உங்களுக்கு தெரியுமா இளம் பெண்களுக்கு ஊட்டம் அளிக்க கூடிய உணவுகள் இவைதானாம்

nathan

ஆண்களுக்கும் – பெண்களுக்கும் அருமருந்து.!! வாழைப்பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் நமது உடலுக்கு ஏற்படும் நண்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா குடைமிளகாயை தினமும் உணவில் சேர்ப்பதனால் என்ன பயன்?

nathan

உங்களுக்கு தெரியுமா பாலக் பன்னீர் ரெசிபி எவ்வாறு செய்வது???

nathan

ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

nathan