வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் லாலிபாப் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.
தேவையானவை:
சிக்கன் லாலிபாப் துண்டுகள் – 8
முட்டை – ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
தயிர் – 50 மில்லி
கார்ன் ஃப்ளார் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
ஃபுட் கலர்(சிவப்பு) – ஒரு சிட்டிகை(விரும்பினால்)
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம்செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுத்து, மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், ஊறவைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை அதில் பொரிக்கவும். பொரித்தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டுகளை ஒரு டிஸ்யூ தாளில் எடுத்து வைத்து, மிகையான எண்ணெய் உறிஞ்சப்பட்டதும் சூடாகப் பரிமாறவும்.