28.6 C
Chennai
Monday, May 20, 2024
nattu kozhi kuzhambu 29 1469796379
அசைவ வகைகள்

சிம்பிளான… நாட்டுக் கோழி குழம்பு

பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட, நாட்டுக் கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு தேங்காய் சேர்க்காமல் சுவையான நாட்டுக் கோழி குழம்பு வேண்டுமானால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு சமைத்து சாப்பிடுங்கள்.

சரி, இப்போது நாட்டுக் கோழி குழம்பின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி – 1 கிலோ வெங்காயம் – 3 (நறுக்கியது) தக்காளி – 3 (நறுக்கியது) சிக்கன் மசாலா பவுடர் – 50 கிராம் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு… சோம்பு – 1 டேபிள் ஸ்பூன் பட்டை – 2 செ.மீ இஞ்சி – 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) பூண்டு – 10 பற்கள்

செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, அதில் பாதியை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மீண்டும் குக்கரில் போட்டு கிளற வேண்டும். பிறகு அதில் உப்பு, சிக்கன் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, சிக்கனை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சிம்பிளான நாட்டுக் கோழி குழம்பு ரெடி!!!

nattu kozhi kuzhambu 29 1469796379

Related posts

சில்லி சிக்கன்

nathan

சுறா மீன் புட்டு

nathan

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

ஆட்டிறச்சிக் குழம்பு

nathan

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

nathan

கறிவேப்பிலை மீன் வறுவல் – இந்த வார ஸ்பெஷல்!

nathan

நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

மட்டன் சுக்கா

nathan

சூப்பரான பசலைக்கீரை பக்கோடா

nathan