201612021317332290 Wheat semolina Vegetable kanji SECVPF
​பொதுவானவை

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான உணவு கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 1 கப்,
தேங்காய்ப்பால் – அரை கப்,
பச்சைமிளகாய் – 2,
கேரட் – 1
பீன்ஸ் – 10
பட்டாணி – சிறிதளவு,
தண்ணீர், உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை :

* காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும்.

* அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் கோதுமை ரவையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

* வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.

* சத்தான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி ரெடி.

பலன்கள்: சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும்.201612021317332290 Wheat semolina Vegetable kanji SECVPF

Related posts

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்

nathan

சுவையான பக்வீட் பக்கோடா

nathan

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

nathan

உங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan

சுவையான சாம்பார் பொடி செய்முறை

nathan

வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல்

nathan

செயின் பறிப்பு – கொள்ளை சம்பவங்கள்: பெண்கள் பாதுகாத்து கொள்வது எப்படி?

nathan

பெண் குழந்தைகளுக்கு தொடுதலை பற்றி சொல்லி கொடுங்க

nathan

சூப்பரான பூசணிக்காய் கறி

nathan