35.9 C
Chennai
Wednesday, Jul 16, 2025
201611250724106773 The best medicine for constipation Kiwi fruit SECVPF
ஆரோக்கிய உணவு

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் ‘கிவி’ பழம்

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் ‘கிவி’ பழம்
உலகிலேயே நியூசிலாந்தில்தான் ‘கிவி’ பழம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நியூசிலாந்து நாட்டு மக்களை ‘கிவிஸ்’ என்று செல்லமாக அழைப்பது உண்டு. ‘கிவி’ என்று இந்த பழத்திற்கு பெயர் ஏற்பட்டதும் அதன் தொடர்ச்சிதான்.

நியூசிலாந்துதான் கிவி பழத்தை அதிகம் விளைவிக்கும் நாடு என்றாலும், அந்த பழத்துடன் பாரம்பரிய தொடர்பு கொண்ட நாடு சீனா. அதனால் இந்த பழத்துக்கு சீனத்து நெல்லிக்கனி என்ற மற்றொரு பெயரும் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக கிவி பழமானது சீனாவில் விளைவிக்கப்படுகிறது. தவிர, இத்தாலியிலும் இது விளைகிறது.

இந்தியாவுக்குள் கிவி பழங்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருப்பதால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும், அந்த பழத்தில் உள்ள நிறைந்த மருத்துவக் குணங்களுக்காக அவற்றை நாம் விரும்பி வாங்கி சாப்பிடலாம். கிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை விரும்பி சாப்பிடலாம். வைட்டமின் ‘சி’ அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய் தடுப்பாற்றல் சக்தியை அதிகம் தரக்கூடியது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பைத் தடுப்பதிலும் கிவி முக்கிய பங்காற்றுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் சூழலில், அதற்கு முன்னதாக பல வகையான நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. அப்போது ரத்தக் குழாய்களில் உள்ள ரத்தத்தில் சிவப்பணுக்கள் உள்ளிட்டவை ஒன்றாக சேர்ந்து, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு இதய தமணிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் சக்தி கிவி பழத்துக்கு உண்டு.

வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலேட் என்ற சத்தும், ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. நீரிழிவு நோயாளி பயப்படாமல் இந்தப் பழத்தை சாப்பிடலாம். கிவி பழம், இனிப்பானதுதான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு. அதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

கிவி பழத்தில் உள்ள ‘வைட்டமின் ஈ’ சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு, பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையையும் உருவாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு கிவி பழம். அவர்கள் தொடர்ந்து இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம். இவ்வளவு நன்மைகள் இருப்பதால் கிவி பழத்தை நிறைய சாப்பிடலாம். 201611250724106773 The best medicine for constipation Kiwi fruit SECVPF

Related posts

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! தினமும் ஒரு பச்சை வெங்காயம்… உடலில் ஏற்படும் அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…இட்லி போன்ற அவித்த உணவுகளை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

nathan

பக்கவாதத்தை தடுக்கும் உணவுப் பழக்கங்கள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

நைட் தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு,, நம் பாரம்பரிய சத்து மாவு தயாரிப்பது எப்படி?

nathan

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்

nathan

எந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்..!!

nathan

அஜீரணம், நெஞ்செரிச்சலை குணமாக்கும் மோர்

nathan

ட்ரை ஃபுரூட்ஸ் மாம்பழ லஸ்ஸி

nathan