30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201611241102566896 Digestion of food eaten in three ways SECVPF
ஆரோக்கிய உணவு

உண்ணும் உணவு ஜீரணமாக மூன்று வழிகள்

நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

உண்ணும் உணவு ஜீரணமாக மூன்று வழிகள்
நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். உணவை நாம் எப்படி சாப்பிட்டால், அதிலுள்ள அனைத்து பொருட்களும் ரத்தத்தில் கலக்கும் என்பதற்கு இந்த மூன்று வழிகளும் முக்கியமானவை. அவை பசி, உமிழ்நீர், உணவில் கவனம் ஆகியவை தான்.

பசி தான் நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தயார் செய்யும் அம்சம். இந்தப் பசி தான் நாம் உண்ணும் உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி ரத்தத்தில் கலக்கச் செய்ய தயார் என்று கூறும் குறிப்பாகும். பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது. சில சமயம் அதுவே விஷமாகவும் மாறுகிறது. நல்ல ஜீரணத்திற்கான முதல் வழி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது.

இரண்டாவது வழி நாம் சாப்பிடும் உணவில் உமிழ்நீர் சேர வேண்டும். உமிழ்நீர் கலக்காத உணவு கெட்ட ரத்தமாகிறது. உமிழ்நீரில் நிறைய நொதிகள் உள்ளன. உணவில் உள்ள மூலக்கூறுகளை பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. உமிழ்நீருடன் சேர்ந்து உட்கொள்ளும் உணவை மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும்.

உமிழ்நீர் படாமல் உணவு வயிற்றுக்குள் போகும்போது அது கெட்ட உணவாக மாறுகிறது. யார், யாரெல்லாம் உதடுகளை திறந்து வைத்துக்கொண்டு உணவுப்பொருட்களை மெல்கிறார்களோ அந்த உணவில் உமிழ்நீர் கலப்பதில்லை. உணவு பொருட்களை மெல்லும் போது உதட்டை மூடிக்கொண்டு மெல்ல வேண்டும். அப்போது தான் உமிழ்நீர் நன்றாக உணவில் கலக்கும். வாய்க்குள் நுழைந்த உணவை விழுங்கும் வரை உதட்டை திறக்காமல் மெல்வதே ஜீரணத்திற்கு நல்லது.

அதற்கடுத்து உணவில் கவனமாக இருக்க வேண்டும். உணவை உண்ணும்போது நமது கவனம், எண்ணம் ஆகியவை சாப்பிடுவதில் இருந்தால் மட்டுமே ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் நன்றாக சுரக்கும். அதைவிடுத்து குடும்ப விவகாரம், வியாபாரம், அலுவலக பணி போன்றவற்றில் கவனத்தை செலுத்திக்கொண்டு சாப்பிடும்போது ஜீரணம் சம்பந்தப்பட்ட சுரப்பிகள் நன்றாக சுரக்காது.

நமது மூளைக்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும், சுரப்பிகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு மூலமாக இணைப்பு உள்ளது. நாம் எதை எண்ணுகிறோமோ அது சம்பந்தப்பட்ட சுரப்பிகளை இந்த வேகஸ் நரம்பு சுரக்க வைக்கும். அதனால் சாப்பிடும்போது கவனம் சாப்பாட்டின் மீது தான் இருக்கவேண்டும். இந்த மூன்றையும் சரியாக கடைபிடித்தால் ஜீரணப்பிரச்சினை இருக்காது. 201611241102566896 Digestion of food eaten in three ways SECVPF

Related posts

கொழுப்பை குறைக்கும் குடைமிளகாய்

nathan

இதெல்லாம் குழந்தைகளின் எலும்புகளின் வளா்ச்சியை பாதிக்கும் தெரியுமா?

nathan

கண்டிப்பாக வாசியுங்க.. பெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி

nathan

சுவையான வைட்டமின் ‘சி’ நிறைந்த நெல்லிக்காய் பொரியல்

nathan

பழங்களை சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆப்பிளை தோலோடு சாப்பிடலாமா? மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும்? இத படிங்க!

nathan

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அதிக ஆரோக்கிய பலன்களை தரும் வாழைப்பழம்கள்

nathan

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்

nathan