25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
01 1438421758 2foodsthatdoubleasmedicine
ஆரோக்கிய உணவு

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து தீர்வு தரும் சில உணவுகள் – சிறப்பு தொகுப்பு!!!

உடல்நிலை சரியில்லை என மருத்தவரிடம் சென்றால் கண்டிப்பாக நான்கைந்து ஸ்ட்ரிப் மருந்துகளும், டானிக் என்ற பெயரில் ஓரிரு பாட்டில்களும் தருவார். ஆனால், இந்த மருந்துகளைவிட, சாதாரணமாக ஏற்படும் நோய்களுக்கு இரட்டிப்பு மடங்கு சிறந்து தீர்வு தரும் சில உணவுகள் இருக்கின்றன.

அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவமுறை பிரபலமாவதற்கு முன்பு, நம் உணவு முறையினால் தான் நோய்களை விரட்டவும், குணமடையவும் பயன்படுத்தி வந்தனர். அதிலிருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுகளை பற்றி காணலாம்…..

மலைத் தேன் வறட்டு இருமல் சரியாக மலைத்தேனை பயன்படுத்தலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு இதுபோன்ற வறட்டு இருமல் ஏற்படும் போது மாத்திரைகளை வாயில் திணிக்காமல், இயற்கை மருந்துகளை தருவது தான் அவர்களது உடல்நலத்திற்கு நல்லது.

ஊறுகாய் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் புளிப்பு உணவுகள் சாப்பிட்டாலே போதுமானது. தயிர், காய்கறி ஊறுகாய்கள் போன்றவை நல்ல தீர்வு தரும். இந்த வகை உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்

இஞ்சி மாதவிடாய் பிடிப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு இஞ்சி சிறந்த நிவாரணியாக திகழ்கிறது. ஆசியாவின் காரமான மசாலா உணவுப் பொருளில் இஞ்சி இன்றியமயாத மருத்துவ குணங்கள் கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி குமட்டல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற கோளாறுகளுக்கும் இஞ்சி நல்ல தீர்வளிக்கிறது.

பெப்பர்மிண்ட் குடல் எரிச்சல் சார்ந்த பிரச்சனைகளுக்கு பெப்பர்மிண்ட் நல்ல தீர்வளிக்கிறது. மிட்டாய்கள், சூயிங் கம் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் குடல் எரிச்சல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது.

செம்பருத்தி டீ உயர் இரத்த அழுத்தப் பிரச்சனைக்கு ஓர் சிறந்த நிவாரணமாக திகழ்கிறது செம்பருத்தி டீ. மூலிகை டீ வகைகளில் இது ஓர் சிறந்த டீயாக கருதப்படுகிறது..

மஞ்சள் தென்னிந்தியாவின் சொத்து மஞ்சள். அலர்ஜிகள், நோய் எதிர்ப்பு, ஞாபக மறதி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது மஞ்சள். மற்றும் உடல் செல்களின் இயக்கத்தை ஊக்குவித்து உடலை வலுவாக்க உதவுகிறது.

சியா விதைகள் சியா விதைகள் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் சிறந்த உணவாகும். உடலில் சேரும் எல்.டி.எல் எனப்படும் இதயத்திற்கு தீது விளைவிக்கும் கொழுப்பை உடலில் இருந்து கரைக்க சியா விதைகள் உதவுகின்றன.

பீன்ஸ் குறைந்த இரத்த சர்க்கரை அளவை சரிசெய்ய பீன்ஸ் ஓர் சிறந்த உணவாகும். மற்றும் அதிகப்படியான கொழுப்பை கட்டுப்படுத்தவும் பீன்ஸ் உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீறி செய்து, உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

01 1438421758 2foodsthatdoubleasmedicine

Related posts

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சப்போட்டா! எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

ரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்?

nathan

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா..?

nathan

கம்பு ஆலு சப்பாத்தி

nathan

உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கா…? அப்ப இத படியுங்க…

nathan

கருப்பட்டியில் ஒரிஜினலானு கண்டறிய சூப்பரான ஐடியா!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

nathan

உங்களுக்கு தெரியுமா செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan