28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201611151432129290 rava banana paniyaram SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம்

மாலையில் சூடாக சாப்பிட சுவையான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம்
தேவையான பொருட்கள் :

ரவா – 1 கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1.5 கப்
வாழைப்பழம் – 2
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை :

* ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

* பின் ரவையுடன், வாழைப்பழம், மைதா, சர்க்கரை சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரவை மைதா கலவையை ஒரு குழியான ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து வந்ததும் எடுத்து தட்டில் வைத்து பரிமாறவும்.

* சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம் ரெடி.

* வாழைப்பழத்தை மிகவும் நைசாக பிசைந்து கொள்ள கூடாது. சற்று ஒன்றும் பாதியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* இதை குழிப்பணியார சட்டியிலும் செய்யலாம்.201611151432129290 rava banana paniyaram SECVPF

Related posts

ஜெல்லி பர்பி

nathan

மைசூர் பாக்

nathan

சுவையான சுண்டல் கிரேவி

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா

nathan

சுவையான தினை உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டு

nathan

சுவையான பாதாம் பால் பூரி

nathan

சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல்

nathan

தூதுவளை மசாலா தோசை

nathan