இனிப்பு வகைகள்

தித்திப்பான ரவை – தேங்காய் உருண்டை

ரவையுடன், தேங்காய் சேர்த்து உருண்டை செய்தால் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திப்பான ரவை – தேங்காய் உருண்டை
தேவையான பொருட்கள் :

ரவை – ஒரு கப்,
வறுத்த தேங்காய் துருவல் – அரை கப்,
சர்க்கரை – ஒரு கப்,
வறுத்த முந்திரி, திராட்சை – தேவைக்கு
நெய் – 50 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை:

* கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் ரவையை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

* வறுத்த ரவையை ஒரு அகலமான தட்டில் கொட்டி அவற்றுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்குபோது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.

* காய்ச்சிய சர்க்கரை பாகை ரவை கலலையில் சேர்த்து சற்று சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும்.

* சுவையான ரவை – தேங்காய் உருண்டை ரெடி.201611140946055339 rava coconut ladoo SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button