சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை வைத்து குடிக்கலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சளித்தொல்லைக்கு உகந்த தூதுவளை ரசம்
தேவையான பொருட்கள் :
ரசத்திற்கு தட்டிக் கொள்ள :
தூதுவளை – ஒரு கைபிடி
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 5
மிளகாய் வற்றல் – 1
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தக்காளி – விரும்பினால்
தாளிக்க :
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 இணுக்கு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
ரசப்பொடி – 1 டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பருப்பு வேக வைத்த தண்ணீர் – சிறிது பருப்புடன்
உப்பு – தேவைக்கு.
செய்முறை :
* புதிய தூதுவளை வாங்கி ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.
* புளியை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு ரசத்திற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு வதக்கிக் ஆறவைத்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
* அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் மிக்சியில் அரைத்ததை போட்டு வதக்கவும்.
* அடுத்து மஞ்சள் தூள், பெருங்காயம், ரசப்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
* புளித்தண்ணீர் சேர்க்கவும். தண்ணீருடன் பருப்பும் விரும்பினால் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
* கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.
* சுவையான ஆரோக்கியமான தூதுவளை ரசம் ரெடி.
* அப்படியே சூப் போல் குடிக்கலாம். அல்லது சுடு சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். இந்த ரசம் சளித்தொல்லைக்கு மிகவும் நல்லது.