ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கீழே பார்க்கலாம்.
ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டியவை
* வெங்காயம், ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும் புற்று நோய், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய் தொற்றை தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள லிலின் என்ற ரசாயனம் பாக்டீரியாக்கள், நச்சுகள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றது. இத்துடன் புற்றுநோய்க்கட்டிகள் வளராமலும் தடுக்கின்றது.
* ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்-சி சேகரித்து வைக்கப்பட்டு உள்ளது. இன்டர்பெரான் என்ற ரசாயனத்தை அதிகம் உற்பத்தி செய்கிறது. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்து உடலில் அவை சேராமல் அழிக்கின்றன.
* பாதாம்பருப்பு, வேர்க்கடலை போன்றவைகளில் உள்ள வைட்டமின்-ஈ, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சிறப்பாக செயல்படத்தூண்டுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
* குடல் புண்கள் குணம் பெற முட்டைக்கோஸில் உள்ள குளுட்டாமைன் என்ற அமிலம் உதவுகிறது.
* நல்ல உணவோடு, போதிய உடற்பயிற்சியும் நோய் தடுப்பாற்றலை வளர்க்கும். எனவே, நாள் தோறும் ஒரு மணி நேர உடற்பயிற்சி அவசியம்.