32.2 C
Chennai
Monday, May 20, 2024
spices 12436
அசைவ வகைகள்

தீபாவளிக்கு என்ன மட்டனா? இதை ட்ரை பண்ணலாமே!

எப்பவும் செய்யும் உணவுகளை விட கொஞ்சம் ஸ்பெசலாய் செய்தால்தான் அது தீபாவளி. இந்த தீபாவளிக்கு அசைவ ப்ரியர்கள் கண்டிப்பாக மட்டனை மிஸ் செய்யமாட்டார்கள் என்பதால் அவர்களுக்கான "காரைக்குடி ஸ்பெசல் மட்டன் நெய் பிரட்டல்" செய்முறை. மட்டன் பிரட்டல் வகையில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் ரெசிப்பி இது.

முதலில் தேவையானவை – (செய்முறை 1 கிலோ மட்டனுக்கு )

மட்டன் – 1 கிலோ
நெய் 100 கிராம்
10 – வரமிளகாய்
1 தேக்கரண்டி மல்லி
1 தேக்கரண்டி சீரகம்
1 தேக்கரண்டி சோம்பு
2 தேக்கரண்டி மிளகு

15 முந்திரி பருப்புகள்
1 மேஜைக்கரண்டி பூண்டு இஞ்சி பேஸ்ட்
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
பட்டை இரண்டு விரல் அளவு
4 கிராம்பு
4 ஏலக்காய்
தயிர் – 150 மிலி
ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து எடுக்கப்பட்ட சாறு

( டீ ஸ்பூன் மற்றும் டேபிள் ஸ்பூன் வேறுபாடு அறிந்து பொருட்களை சேர்க்கவும் )

முதலில் மட்டனை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பின்னர் காய்ந்த பான் அல்லது கடாயில் 50 கிராம் நெய் ஊற்றி சூடாக்கவும். சூடாகியதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு இஞ்சி பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள், விரல் அளவு பட்டை போட்டு லேசாக வதக்கவும். பூண்டு இஞ்சி பேஸ்ட் வதங்கியதும் வெட்டிய மட்டன் துண்டுகளை அதில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கவும். வதங்கிய மட்டன் நிறம் மாறிய பின்பு அதை மூடும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மீடியத்தில் வைத்து நான்கு – ஐந்து விசில் விடவும்.

spices 12436

வரமிளகாய்களுடன் முந்திரி பருப்பு மற்றும்

1 தேக்கரண்டி மல்லி
1 தேக்கரண்டி சீரகம்
1 தேக்கரண்டி சோம்பு
2 தேக்கரண்டி மிளகு
4 கிராம்பு
4 ஏலக்காய் – ஆகியவற்றை காய்ந்த பான் அல்லது வடசட்டியில் போட்டு வறுக்கவும். ரொம்பவும் மொறு மொறு பதத்திற்கு போகாமல், இளம் சூடாய் வறுத்து ஆற வைக்கவும். பின்னர் அந்த பொருட்களை மிக்சியில் சிறிது தண்ணீர் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவை கலந்து அரைத்துக்கொள்ளவும்.

குக்கரின் உள்ள கறியை தனியாக எடுத்துக்கொண்டு கறி வெந்த தண்ணீரை (பிராத் -Broth ) தனியாக எடுத்து வைக்கவும். அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் மீதி இருக்கும் 50 கிராம் நெய் விட்டு சூடாக்கவும், சூடாகிய பின் இப்போது வறுத்து அரைத்த மசாலாவை அதில் போட்டு மேற்கொண்டு தயிர் ஊற்றி வதக்கவும். பச்சை வாசனை எல்லாம் போய் மசாலா நன்றாக வதங்கி வந்த பின் அதில் கறியை போட்டு பிரட்டவும். பின்னர் கறி வெந்த தண்ணீரை ஊற்றி அடுப்பை மீடியத்தில் வைத்து 5 நிமிடங்கள் அவ்வப்போது வதக்கியப்படி இருக்கவும். பிறகு கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

சூடான சோற்றில் போட்டு சாப்பிடவும், இட்லி, சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளவும் மிக மிக சுவையாக இருக்கும்.

Related posts

வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் ஷவர்மா…

nathan

புதினா சிக்கன் குழம்பு

nathan

முட்டை மசாலா சமையல் குறிப்புகள்

nathan

முட்டை அவியல்

nathan

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

nathan

சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ்

nathan

மொறு மொறுவென்ற கோழி நக்கட்ஸ்

nathan

வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு

nathan

மட்டன் சில்லி ஃப்ரை

nathan