28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
safe image 2 1
சிற்றுண்டி வகைகள்

சத்தான மிளகு அடை

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 200 கிராம்
புழுங்கலரிசி – 200 கிராம்
துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி (பொடித்து கொள்ளவும்)
தேங்காய் பெரிய துண்டுகள் – 2 (சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்)
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
* பருப்பு மற்றும் அரிசியை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
* அரைத்த மாவில் மிளகு தூள், தேங்காய், உப்பு போன்றவைகளை கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசை கல்லில் ஊற்றி அடையாக செய்து சூடாக சாப்பிடவும்.
* இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
* குளிர்காலத்திற்கு ஏற்ற சத்துக்கள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. குழந்தைகளுக்கு நல்லது.safe image 2 1

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை

nathan

குடைமிளகாய் – சீஸ் தோசை செய்வது எப்படி

nathan

உண்டி ஸ்டஃப்டு

nathan

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

nathan

சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan

சுவையான சத்தான கம்பு தோசை

nathan

சுவையான சத்தான ஆலூ பசலைக்கீரை சப்பாத்தி

nathan

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

nathan