36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
கால்கள் பராமரிப்பு

கை,கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்குவது எப்படி?

சருமம் உடல் முழுவதும் ஒரே நிறத்தில் காணப்பட்டால்தான் அழகு. சிலர் சிவந்த நிறமாய் இருந்தாலும் முழங்கை மற்றும் கால் மூட்டுகள் மட்டும் கருப்பாக பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும்.

மூட்டுகளில் கருமை வருவதற்கு காரணம், அங்கே மெலனின் செல்களின் சுரப்பு அதிகமாகியிருக்கும். இறந்த செல்கள் தங்கி, அந்த இடம் பாதிப்படைந்து கருமையாக காண்பிக்கிறது.

இப்படி இந்த கருமையை போக்கி சருமத்தை ஒரே நிறத்தில் இதனை கொண்டு வருவது எப்படி? நீங்கள் எத்தனையோ க்ரீம்களை தடவியும் பிரயோஜனம் இல்லாமல் அப்படியே இருக்கிறதா? கவலையை விடுங்கள். இந்த இயற்கையான அழகுக் குறிப்பை பயன்படுத்துங்கள். பலன் எளிதில் கிடைக்கும்.

தேவையானவை : சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா – 2 டீ ஸ்பூன் சோற்றுக் கற்றாழை – 1 டேபிள் ஸ்பூன்

இந்த கலவை மூட்டுகளில் தினமும் தேய்த்து வந்தால், அங்கு தேங்கியிருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, புதிய செல்கள் உருவாகும். இவை சருமத்தில் ஆழமாக சென்று, அழுக்குகளை நீக்குகிரது. இதனால் மெல்ல மெல்ல கருமை போய்விடும். சமையல் சோடா கருமையை போக்கும் இயற்கையான ப்ளீச்சாக செயல்படுகிறது. சருமத்தை பளிச்சென்று ஆக்கிவிடும்.

செய்முறை : மேலே சொன்ன மூன்றையும் நன்றாக கலந்து, மூட்டுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம்.

தினமும் இதனை செய்யுங்கள் 2 வாரங்களிலேயே கருமை போய்விடும். இன்னும் விரைவான ரிசல்ட் கிடைக்க தினம் காலை மாலை என இருவேளைகளிலும் பயன்படுத்துங்கள்

Related posts

உங்களுக்கு தெரியுமா பாத பித்த வெடிப்பை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்

nathan

ஒரே வாரத்தில் பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற்கான சில வழிகள்!

nathan

பாத வெடிப்பை எப்படி மாயமாக்குவது? இத ட்ரை பண்ணுங்க

nathan

குதிகால் வெடிப்பை குணமாக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்!..

sangika

ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

பயனுள்ள குறிப்பு.. பாத வெடிப்புகளை போக்க சில எளிய வழிமுறைகள்

nathan

மெத்தென்ற பாதங்கள் கிடைக்க என்ன வழி?இதோ டிப்ஸ்

nathan