feet1
அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

குதிகால் வெடிப்பை குணமாக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்!..

வறண்ட கால்களைக் கொண்டவர்களுக்குத்தான் அதிகமாக குதிகால் வெடிப்பு பிரச்சனை வரக்கூடும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்.

குதிகால் வெடிப்பை குணமாக்கும் வீட்டுக் குறிப்புகள்

நீங்கள் என்னதான் மிடுக்கான உடையணிந்து தோற்றமளித்தாலும் பின்னங்கால்களின் குதிகால் வெடிப்புகள் அதை பாழாக்கிவிடும். வறண்ட கால்களைக் கொண்டவர்களுக்குத்தான் அதிகமாக இந்தப் பிரச்சனை வரக் கூடும்.

வெடிப்புகள் தாங்க முடியாத வலி, எரிச்சலை உண்டாக்கும். இவற்றையெல்லாம் சரிசெய்ய அதிகம் மெனக்கெடாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே நீக்கலாம்.

feet1

கால்களை நன்கு சுத்தம் செய்தபின் காட்டன் துணியால் ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பின் பாதிக்கப்பட்ட இடத்தில் வெஜிடபிள் எண்ணெயைத் தடவுங்கள்.

பின் சாக்ஸ் அணிந்து கொண்டு இரவு அப்படியே தூங்கிவிடுங்கள். இவ்வாறு தினமும் செய்தால் வெடிப்புகள் தானாக மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறை வெது வெதுப்பான நீரில் பிழிந்து கலந்து கொள்ளுங்கள். அதில் 20 நிமிடங்கள் கால்களை சுத்தம் செய்தபின் ஊற வையுங்கள். வெடிப்புகளோடு கால்களில் இருக்கும் இறந்த செல்களையும் நீக்கிவிடும்.

ஒரு மேசைக் கரண்டி பெட்ரோலியம் ஜெல்லில் ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலக்கிக் கொள்ளுங்கள். பின் கால்களை சுத்தம் செய்தபின் கலவையை கால்களில் தடவி நன்கு தேயுங்கள்.

அந்த கலவையை கால்கள் உள்ளிழுக்கும்வரை தேய்க்கவும். பின் கழுவாமல் அப்படியே சாக்ஸ் அணிந்து இரவு தூங்கிவிடுங்கள். தினமும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

3 மேசைக் கரண்டி பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கால்களை 15 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் சொர சொரப்பான கல்லைக் கொண்டு கால்களை நன்கு தேய்க்க குதிகால் வெடிப்பு நீங்கி, அழுக்கு, இறந்த செல்களும் நீங்கும்.

Related posts

கண்களில் சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் சமையலறைப் பொருட்கள்

nathan

பெண்களை கவரும் கலர் கலர் காலணிகள்

nathan

மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள வழிகள்!…..

nathan

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan

வறட்டு இருமல், இழுப்பு வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்க….

sangika

தோல் மற்றும் கூந்தல் அழகுக்கு வெல்லத்தை பயன்படுத்துவது எப்படி?

nathan

உங்கள் கழுத்தை அழகாக பேணிப் பராமரிக்க

nathan

குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்…

nathan

ஆண்கள் தினமும் ஹேர் ஜெல் பயன்படுத்தலாமா?

sangika