29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
201610201210220931 horse gram idli podi kollu idli podi SECVPF
ஆரோக்கிய உணவு

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்து கொள்வது நல்லது. இப்போது கொள்ளு பொடி செய்வத எப்படி என்று பார்க்கலாம்.

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கொள்ளு – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 15,
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு,
கொப்பரைத் துருவல் – கால் கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும். கொப்பரைத் துருவலை சிவக்க வறுக்கவும். கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்க வும். வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் ஒன் றாகக் கலந்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.

இந்தப் பொடியுடன் நல் லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண் டால்… அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.201610201210220931 horse gram idli podi kollu idli podi SECVPF

Related posts

இதுபோன்று உணவு சாப்பிட்ட‍பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம்!….

sangika

இந்த பொருட்களை மட்டும் சாப்பிடுங்க போதும் ஆயுளுக்கும் புற்றுநோய் உங்களை எட்டியே பார்க்காது!

nathan

ஆரோக்கியமா இருக்க இந்த உணவுகளை பச்சையா சாப்பிடுங்க…

nathan

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் உருளைக்கிழங்கு

nathan

வாயுத் தொல்லை, உடல் சூட்டை போக்க அருகம்புல் துவையல்….

sangika

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… ஆரோக்கியத்தைக் காக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை இப்படி சாப்பிட்டால், இனி வாழ்நாள் முழுவதும் மாத்திரை தேவையில்லை!

nathan

உங்களுக்கு தெரியுமா சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

கொழுப்பைக் குறைக்க தேங்காய்; இளமை நீட்டிக்க கொப்பரை; உடலுக்கு ஊட்டமளிக்க நீராபானம்!

nathan