32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள் என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்
வாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். நாம் தினமும் செய்யும் பழக்கங்களில் ஒன்று தான் பற்களைத் துலக்குவது. ஆனால் நம்மில் பலர், குறிப்பாக ஆண்கள் பற்களைத் துலக்கும் போது நிறைய தவறுகளை செய்வார்கள்.

சொல்லப்போனால் நிறைய ஆண்கள் பற்களைத் துலக்கவே சோம்பேறித்தனப்படுவார்கள். பற்களை சரியாக பராமரிக்காததால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி பார்க்கலாம்.

நீண்ட நாட்களாக ஒரே டூம் பிரஷைப் பயன்படுத்துவது, வாயில் கிருமிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் ஒரு டூத் பிரஷை 2 மாதத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. எனவே அடிக்கடி டூத் பிரஷை மாற்றுங்கள்.

பற்களைத் துலக்காமல் இருப்பதால், வாயில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படாமல் இருந்து, பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே ஒரு முறை பற்களைத் துலக்கினால் 2 நிமிடம் பற்களைத் துலக்க வேண்டும்.

நிறைய ஆண்கள் பற்களைத் துலக்கிவிட்டு, அப்படியே குளியலறையிலேயே டூத் பிரஷை வைப்பார்கள். இப்படி வைத்தால் டூத் பிரஷில் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து, மீண்டும் அதைப் பயன்படுத்தும் போது வாயில் கிருமிகள் நுழைந்து, பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

பற்களைத் துலக்கவே சோம்பேறித்தனப்படும் ஆண்கள் எப்படி நாக்கை சுத்தப்படுத்துவார்கள். ஆனால் இப்படி நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால், நாக்கில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

பற்களைத் துலக்கிய உடனேயே நீரால் வாயைக் கொப்பளிப்பதும் தவறான செயல் தான். எனவே பற்களைத் துலக்கிய பின்பு, உடனேயே நீரால் வாயைக் கொப்பளிக்காமல், 15 நிமிடம் கழித்து வாயைக் கொப்பளியுங்கள்.

Related posts

தடவத்தான் தைலம்… தேய்க்க அல்ல

nathan

நோய் நீக்கும் துளசிமாலை

nathan

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

nathan

மகளிர் முன்னேற்றத்தில் பங்கு கொள்வோம்

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிறுநீர் கோளாறுகளில் இருந்தும் விடுபட ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்து!

nathan

அலர்ஜியின் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்

nathan

கர்ப்ப கால பெண்களுக்கு இடுப்பு வலியை குறைக்க வழிகள்

nathan

மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் அற்புதமான ஒரு இலை எது தெரியுமா?சூப்பர் டிப்ஸ்

nathan

இதோ உங்களுக்காக.. தைராய்டு தொல்லைக்கு தீர்வு!

nathan