30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
veg kurma 19 1453205616
சைவம்

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா

சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் குருமா தான். அதில் பலரும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்து சுவைப்பார்கள். ஆனால் ஹோட்டலில் செய்யப்படும் வெஜிடேபிள் குருமாவிற்கு இணை வர முடியாது. ஏனெனில் ஹோட்டல் வெஜ் குருமாவின் சுவையே தனி.

இங்கு அந்த ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: காய்கறிகள் – 1 1/4 கப் (நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு… துருவிய தேங்காய் – 1/2 கப் முந்திரி – 4 கசகசா – 1/2 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 கிராம்பு – 2 பட்டை – 1/2 இன்ச் ஏலக்காய் – 1

தாளிப்பதற்கு… எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் பிரியாணி இலை – 1 கறிவேப்பிலை – சிறிது

செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, காய்கறிகளைப் போட்டு, உப்பு சேர்த்து பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனைப் போக வதக்கி விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்த காய்கறிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து, குருமா ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால், ஹோட்டல் வெஜிடேபிள் குருமா ரெடி!!!

veg kurma 19 1453205616

Related posts

எள்ளு சாதம்

nathan

சுவையான கேரட் பொரியல்

nathan

சத்தான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி

nathan

தேங்காய் சாதம்

nathan

எலுமிச்சை சாதம்

nathan

பேபி கார்ன் கிரேவி

nathan

பட்டாணி பிரியாணி

nathan

காரசாரமான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

nathan